பாகிஸ்தான் ராணுவம், ஜம்மு-காஷ்மீரில் ISI பயங்கரவாதிகளை பெருமளவில் ஊடுருவ திட்டமிட்டுள்ளதாக புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது சட்டப்பிரிவு ரத்து செய்யது, அம்மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது மத்திய அரசு. அந்த மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். செல்போன், இணையதள சேவைகள் முடக்கப்பட்டன. காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பல அரசியல் கட்சிகள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். 


இந்நிலையில்,  இந்த முடிவுக்கு பாகிஸ்தான் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறது. ஜம்மு-காஷ்மீரில் பிரச்சினையைத் தூண்டுவதற்கான பாகிஸ்தான் ராணுவம், ஜம்மு-காஷ்மீரில் ISI பயங்கரவாதிகளை பெருமளவில் ஊடுருவ திட்டமிட்டுள்ளதாக புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய புலனாய்வு அமைப்புகளின் மதிப்பீட்டு அறிக்கையின்படி, அதிக பயிற்சி பெற்ற பயங்கரவாதிகளை நாட்டிற்குள் தள்ளுவதற்காக பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ISI ஆகியவை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (Pok) மூன்று புதிய பயங்கரவாத முகாம்களை அமைத்துள்ளன. 


பாக்கிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் 18 பயங்கரவாத முகாம்கள் மற்றும் ஏவுதளங்களை இந்திய புலனாய்வு அமைப்புகள் அடையாளம் கண்டுள்ளது. அங்கு பயங்கரவாதிகள் பயிற்சி பெற்று, ஜம்மு-காஷ்மீரில் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து இந்தியாவுக்குள் ஊடுருவத் தயாராகி வருவதாக தெரிவித்துள்ளனர். 


ஏஜென்சிகள் பயங்கரவாத முகாம்களையும், கட்டுப்பாட்டுப் பாதையில் ஏவுதளங்களையும் அடையாளம் கண்டுள்ளது. மன்ஷெரா, கோட்லி மற்றும் A-3 ஆகிய மூன்று பிரிவுகளில் முக்கிய பயங்கரவாத முகாம்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மன்ஷெராவின் கீழ், பாலகோட், காரி, ஹபிபுல்லா, பத்ராசி, செரோ மண்டி, சிவாய் நாலா, முஸ்கரா மற்றும் அப்துல்லா பின் மசூத் ஆகிய இடங்களில் ஏவுதளங்கள் உள்ளன.


கோட்லி பகுதியில், குல்பூர், சேசா, பாராலி, துங்கி மற்றும் கோட்லி ஆகிய இடங்களில் பயங்கரவாத முகாம்கள் மற்றும் ஏவுதளங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. A-3 செக்டார், காளி காதி மற்றும் ஹசீரில் பயங்கரவாத முகாம்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை தவிர, பஹவல்பூர், பும்பா மற்றும் பர்னாலாவில் புதிய முகாம்கள் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.