உரிமை மீறியதற்காக பாகிஸ்தான் அகற்றப்படும் அபாயம் உள்ளது என பாகிஸ்தானை எச்சரிக்கும் ராஜ்நாத் சிங்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 1965 மற்றும் 1971 ஆம் ஆண்டின் தவறுகளை மீண்டும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இல்லையெனில் " இந்த உலகில் எந்த சக்தியும் அண்டை நாட்டை சிதைவதிலிருந்து காப்பாற்ற முடியாது" என அவர் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். 


பாட்னாவில் பா.ஜ.க சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசுகையில்; " 1965 மற்றும் 1971-களில் செய்த அதே தவறை பாகிஸ்தான் மீண்டும் செய்து கொண்டிருக்கிறது. அண்டை நாட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தி, அப்பட்டமாக மனித உரிமைகளை மீறி வருகிறது. 370 சட்டப்பிரிவு என்பது புற்றுநோயை போன்று, காஷ்மீரை ரத்தம் சிந்த வைத்தது. காஷ்மீர் மக்கள் தொகையில் நான்கில் மூன்று பங்கிற்கும் அதிகமானவர்கள் 370 பிரிவு நீக்கப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.



ஜம்மு காஷ்மீர் 370 பிரிவு விவகாரத்தில் பா.ஜ.க ஒருபோதும் தனது நிலைப்பாட்டை மாற்றியதில்லை. பொறுப்பற்ற முறையில் எதையும் செய்வும் இல்லை. 370 பிரிவு கிழித்தெறியப்பட்டதில் இருந்தே கட்சியின் நேர்மையும், நம்பகத்தன்மையும் தெரியும்.


பாகிஸ்தானின் எல்லை தாண்டி பயங்கரவாதத்தால் காஷ்மீரின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்தினால் மட்டுமே இனி பாகிஸ்தான் உடன் பேச்சுவார்த்தை. அத்துடன் காஷ்மீர், இந்தியாவின் உள்ளார்ந்த பகுதியை என்பதை பாக்., நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இனி பேச்சுவார்த்தை என்பது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பற்றியதாக மட்டுமே இருக்கும்" என அவர் தெரிவித்துள்ளார்.