பாகிஸ்தானில் பெனாசிர் பூட்டோவின் காலத்தில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த திவ்யாரம், இந்தியாவில் குடியுரிமை பெறவுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகிஸ்தானில் பெனாசிர் பூட்டோவின் காலத்தில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த திவ்யாரம் ஹரியானாவின் பதேஹாபாத்தில் வசித்து வருகிறார். பாகிஸ்தானில் சித்திரவதை செய்யப்பட்ட பின்னர், தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள இந்தியா தஞ்சம் புகுந்த திவ்யாரம் இந்தியாவின் ரதன்கரின் பதேஹாபாத் கிராமத்தில் வசித்து வருகிறார்.


தனது வாழ்வாதாரத்திற்காக குளிர்காலத்தில் வேர்க்கடலை மற்றும் கோடையில் ஐஸ்கிரீம் விற்று தனது குடும்பத்தை பார்த்து வருகிறது. இந்நிலையில் தற்போது நாடாளுமன்ற இரு அவைகளிகும் குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து அவருக்கு குடியுரிமை கிடைக்க இருப்பதாக தெரிகிறது. இதனை உணர்ந்துள்ள அவர் குடியுரிமை திருத்த மசோதாவினை வரவேற்று தனது குட்பத்தாருடன் கொண்டாடி வருகின்றார்.
 
இந்த மசோதாவை நிறைவேற்றிய பின்னர், இந்தியாவின் குடியுரிமை பெற்ற பிறகு, இப்போது அவரது குடும்பத்தின் ரேஷன் கார்டும் தயாரிக்கப்படும் என்றும், அரசாங்கத்தால் வழங்கப்படும் வசதிகளை அவர்களும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும் அவர் நம்புகிறார். 


ஊடகங்களுடன் பேசிய திவ்யாராம், பாகிஸ்தானில் முஸ்லிமல்லாதவர்களுக்கு சில இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு தான் அரசியலுக்கு வந்தபோது, பெனாசீர் பூட்டோ ​​தன்னை உற்சாகமாக வரவேற்றார் எனவும் தெரிவித்துள்ளார்.


தனது அறிக்கையில், திவ்யாராம், பூட்டோ தன்னை தனி தொகுதியில் நிறுத்தி MP ஆக்கியதில் மகிழ்ச்சியடைந்ததாக கூறினார். எனினும் எம்.பி. ஆன பிறகு தனது குடும்பத்திற்கு கஷ்டங்கள் அதிகரித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் பின்னர், கோபமடைந்த முஸ்லீம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் 15 நாட்களுக்குப் பிறகு அவரது குடும்பத்திலிருந்து ஒரு பெண்ணை கடத்திச் சென்று, பதவியை விட்டு விலக கோரி அச்சுறுத்தினர் எனவும் குறிப்பிட்டுள்ளார். தனக்கும் தங்கள் குடும்பத்திற்கும் பாகிஸ்தானில் பிரச்சனைகள் அதிகரித்த நிலையில் திவ்யாராம் தனது குடும்பத்தாருடன் இந்தியாவிற்கு தஞ்சம் புகுந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இது தவிர, தனது வழக்கு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தையும் சென்றடைந்தது என்று திவ்யரம் கூறினார். உச்சநீதிமன்ற நீதிபதியும் சமரசம் செய்து வழக்கை முடிக்க அறிவுறுத்தினார் என்று அவர் கூறினார்.