ஜம்மு காஷ்மீரில் 370 வது சட்டப் பிரிவு (Article 370) நீக்கப்பட்டு ஒரு வருடம் நிறைவடையும் நிலையில், காஷ்மீர் பிரச்சினையை எழுப்புவதற்கான மற்றொரு முயற்சியாக, காஷ்மீர் மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், ஆகஸ்ட் 5 அன்று பாகிஸ்தான் நாடு முழுவதும் ஒரு நிமிட மௌனத்தை கடைப்பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரேடியோ பாக்கிஸ்தானின் (Pakistan) கூற்றுப்படி, வெகுஜன பேரணிகள் மற்றும் அமைதிப் பேரணிகள் அன்று திட்டமிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு, காஷ்மீர் பிரச்சினையில் தலையிட பாகிஸ்தான் பல முயற்சிகளை மேற்கொண்டது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தன்னை ஜம்மு காஷ்மீரின் தூதர் எனக்கூட சொல்லிக்கொண்டார்.


370 வது பிரிவை இந்தியா நீக்கியதிலிருந்து, பாகிஸ்தான் பல சர்வதேச தளங்களில் இந்த பிரச்சனையை எழுப்பியுள்ளது. இது இந்தியாவின் உள்நாட்டு விஷயம் என்பதை இந்தியா ஒன்றுக்கு மேற்பட்ட முறை தெளிவுபடுத்திய போதிலும், பாகிஸ்தான் அடங்குவதாக இல்லை. பள்ளத்தாக்கில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் தொடர்ந்து நிதியுதவி அளித்து வரும் நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்திய அரசாங்கத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மேலும் பள்ளத்தாக்கில் இந்தியப் படைகள் பற்றிய போலி செய்திகளைக் கூட பரப்பி வருகிறார். இருதரப்பு பிரச்சினையில் உலகளாவிய மத்தியஸ்தத்திற்கு அழைப்பு விடுத்த பின்னர் அவர் சர்வதேச அளவில் தோல்வியை எதிர்கொண்டார்.


தற்போது பாகிஸ்தான் செய்யும் இந்த ‘ஒரு நிமிட மௌனம்’ நாடகம் சமூக ஊடகங்களில் வெகுவாக கிண்டலுக்கு ஆளாகியுள்ளது. பாகிஸ்தானைப் பற்றி நன்கு அறிந்த மக்கள் அதன் நாடகத்தை இனியும் நம்புவதாக இல்லை.


2019 ஆம் ஆண்டில், இந்திய அரசு 370 வது பிரிவை ரத்து செய்தது – 370 ஆவது பிரிவு முந்தைய ஜம்மு-காஷ்மீர் (Jammu Kashmir) மாநிலத்திற்கு சிறப்பு உரிமைகளை வழங்கியது. மத்திய அரசு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு ஜாஷ்மீர் மற்றும் லடாக் என யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. ஆகஸ்ட் 5 ம் தேதி நாடாளுமன்றத்தில் இந்த முடிவை அறிவிப்பதற்கு முன்னர், மத்திய அரசு, ஜம்மு ஜாஷ்மீரின் முக்கிய அரசியல் தலைவர்களை தடுப்புக்காவலில் வைத்தது. பாகிஸ்தானில் இருந்து பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய அரசு கருதியதால், முடிவுக்கு முன்னதாக காஷ்மீர் ஜம்மு காஷ்மீருக்கு கூடுதலாக 38000 துருப்புக்கள் அனுப்பப்பட்டன.


ALSO READ: இரண்டாவது முறையாக சட்ட உதவியை பெற்றார் Kulbhushan Jadhav ..!!!


ஏழு மாத தடுப்புக்காவலுக்குப் பிறகு, ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் என்.சி தலைவர் பாரூக் அப்துல்லா, அவரது மகன் மற்றும் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஷா பைசல் மற்றும் பலரை விடுவித்தது. இருப்பினும், பி.டி.பி தலைவர் மெஹபூபா முப்தி உள்ளிட்ட சில தலைவர்கள் இன்னும் காவலில் உள்ளனர்.