இந்தியாவுடன் போரிடப்போவதாகக் கூறி பாகிஸ்தான் (Pakistan) மீண்டும் ஒரு முறை இந்தியாவை சீண்டியுள்ளது. இந்தியாவுடனான அணுசக்தி யுத்தம் குறித்து பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது. தனது ஆயுதங்கள் முஸ்லீம் உயிர்களைக் காப்பாற்றும் என்றும் இந்தியாவில் குறிப்பிட்ட இலக்குக்ளை மட்டுமே தாக்கும் என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது.  ஆகஸ்ட் 19 (புதன்கிழமை) அன்று பாகிஸ்தான் ஊடக சேனலான சமா டிவிக்கு அளித்த பேட்டியில், பாகிஸ்தான் அமைச்சர் ஷேக் ரஷீத் (Sheikh Rashid), பாகிஸ்தானிடம் இதற்குத் தேவையான சரியான ஆயுதங்கள் இருப்பதாகத் தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தங்களது ஆயுதங்கள் சில குறிப்பிட்ட இடங்களை மட்டும் குறிவைக்கும் என்றும், இப்போது அசாமும் அதன் வரம்பில் வந்துவிட்டது என்றும் அவர் கூறினார். வழக்கமான போரைப் பற்றி பாகிஸ்தான் எண்ணவில்லை என்றும், அப்படி ஏதாவது நடந்தால் அது முடிவாக இருக்கும் என்றும் ரஷீத் எச்சரித்தார்.


"பாகிஸ்தான் இந்தியாவால் தாக்கப்பட்டால், அது வழக்கமான போராக இருக்க எந்த வாய்ப்பும் இல்லை. அது ஒரு இரத்தக்களரி மிக்க மற்றும் அணுசக்தி யுத்தமாக இருக்கும். நிச்சயமாக இது ஒரு அணுசக்தி யுத்தமாக இருக்கும். இதற்கு ஏற்ற சரியான ஆயுதங்களை எங்களிடம் உள்ளன. எங்கள் ஆயுதங்கள் முஸ்லிம்களைக் காப்பாற்றி சில இடங்களை மட்டும் தாக்கும். பாக்கிஸ்தான் வரம்பில் இப்போது அசாமும் உள்ளது. ஏதாவது நடந்தால் அதுதான் முடிவாக இருக்கும் என்று இந்தியாவுக்கும் தெரியும் "என்று ரஷீத் கூறினார்.


பாகிஸ்தான் அணுவாயுதப் போரின் பேரில் இந்தியாவை அச்சுறுத்துவது இது முதல் முறை அல்ல. 2019 ல் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவுடனான அணுசக்தி யுத்தம் குறித்து பல சந்தர்ப்பங்களில் பேசினார்.


ALSO READ: ‘இம்ரான் கானுக்கு சவாலாக அரசியலில் இறங்குவேன்’ – அதிரடியாய் அறிவித்த Javed Miandad!!


ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370 வது பிரிவை இந்தியா ரத்து செய்த பின்னர், சர்வதேச சமூகத்திடம் இம்ரான் கான் (Imran Khan) இது குறித்து புகார் அளித்தும், அதை எந்த நாடும் கண்டுகொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் வைத்திருக்கும் அணு ஆயுதங்களைப் பற்றி அவர் குறிப்பிட்டார். அவரது அமைச்சர்களும் அணு ஆயுதங்களைப் பற்றி மிகவும் பொறுப்பற்ற முறையில் பேசியிருந்தனர்.


ஆகஸ்ட் 2019 இல் கான், "காஷ்மீரில் (PoK) எதையும் செய்ய எங்கள் இராணுவம் தயாராக உள்ளது என்று நான் நரேந்திர மோடியிடம் சொல்ல விரும்புகிறேன். இரண்டு அணுசக்தி நாடுகள் போரிட்டால், அதனால் ​​உலகம் முழுவதும் பாதிக்கப்படும் என்பதை உலகம் அறிந்து கொள்ள வேண்டும்.  நான் பேசும் அனைவரிடமும் இதை நான் சொல்கிறேன், '' என்று பாகிஸ்தான் பிரதமர் கூறினார். 'காஷ்மீர் ஹவர்' பேரணியில் உரையாற்றும் போது இம்ரான் கான் இந்த கருத்துக்களை தெரிவித்திருந்தார்.


செப்டம்பர் 2019 இல், கான், ஒரு அணுசக்தி யுத்தத்தின் ஆபத்து, உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களின் எழுச்சி ஆகியவற்றைப் பற்றி மீண்டும் வலியுறுத்தினார். ஐ.நா பொதுச் சபையில் (UNGA) கலந்துகொண்டபோது, பிரதமர் நரேந்திர மோடியும் (Narendra Modi), அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் மேற்கொண்ட சந்திப்பிற்குப் பிறகு, கான் இவ்வாறு பேசினார். 


ALSO READ: 'ஜெய் ஸ்ரீ ராம்,' என்று தெரிவித்த பாகிஸ்தானின் இந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்....'