ஜம்மு: சிலருக்கு சொல் புத்தியும் கிடையாது, சுய புத்தியும் கிடையாது. இந்திய ராணுவம் மூலம் பல முறை தாங்கள் மேற்கொண்ட பல வித நாச வேலைகள் முறியடிக்கப்பட்ட போதிலும் பாகிஸ்தான் திருந்துவதாக இல்லை. மீண்டும் மீண்டும் இந்தியாவை சீண்டிக்கொண்டிருக்கிறது. தற்போது அது செய்துள்ள சீண்டல் ட்ரோன் மூலம் வேவு பார்ப்பது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 BSF-ன் 19 வது பட்டாலியனின் ரோந்துப் படை, எல்லையில் தனது வழக்கமான ரோந்துப் பணியை மேற்கொண்டிருந்தபோது, ​​ஜம்மு-காஷ்மீரில் (Jammu Kahmir) ஹிரானகர் செக்டர் அருகே கட்டுப்பாட்டுக் கோட்டில் ஒரு பாகிஸ்தான் (Pakistan) ட்ரோன் பறந்து வருவதை வீரர்கள் கண்டனர்.


அறிக்கையின்படி, வெள்ளிக்கிழமை (ஜூலை 31) இரவு 10:30 மணியளவில் எல்லையில் உள்ள ஒரு பாதுகாப்புத் தளம் அருகே, ட்ரோனை BSF வீரர்கள் கவனித்தனர். அதன் பிறகு அங்கு தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  


முன்னதாக ஜூன் மாதத்தில், ஜம்மு-காஷ்மீரில் சர்வதேச எல்லையில் ஒரு பாகிஸ்தான் ட்ரோனை BSF வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். இந்த ட்ரோனின் உதவியுடன் பாகிஸ்தான் ஏஜென்சிகள் எல்லையை தாண்டி ஆயுதங்களையும் கொண்டு வர முயன்றனர். கத்துவா மாவட்டத்தில் ஹிராநகர் தாலுகாவில் உள்ள ரத்துவா கிராமத்தில் உள்ள ஃபார்வர்ட் தளத்தில்  ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


19 –அவது பட்டாலியனைச் சேர்ந்த பி.எஸ்.எஃப் இன் ரோந்துக் குழு ஹிராநகர் செக்டரின் ரதுவா பகுதியில் பாகிஸ்தான் ட்ரோன் பறப்பதைக் கண்டறிந்து அதன் மீது எட்டு சுற்றுகளைச் சுட்டது. இதனால் அந்த ட்ரோன் வீழ்த்தப்பட்டது. 1 எம் -4 அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, 2 மேகசின்கள், 60 சுற்று தோட்டாக்கள் மற்றும் 7 கையெறி குண்டுகள் ஆகியவை மீட்க்கப்பட்டன.


ALSO READ: இந்தியா வந்தடைந்தது ரஃபேல் விமானம்: தேசிய பாதுகாப்பு என பிரதமர் பெருமிதம்…!!!


காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது (JeM) பயங்கரவாத அமைப்பின் வலிமையை அதிகரிப்பதற்காக, பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் எல்லை தாண்டி இதுபோன்ற ட்ரோன்கள் வழியாக ஆயுதங்களை கடத்துகின்றன என்று அதிகாரிகள் நம்புகின்றனர். எல்லையைத் தாண்டி ட்ரோன் மூலம் ஆயுதங்களை கடத்த பாகிஸ்தான் ஏஜென்சிகள் மேற்கொண்ட இதுபோன்ற பல முயற்சிகள் கடந்த காலங்களில் படைகளால் முறியடிக்கப்பட்டுள்ளன.