சீன செய்தித்தாளான குளோபல் டைம்ஸ் மீண்டும் இந்தியாவை மிரட்டி பார்க்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவின் இராஜதந்திர ரீதியிலான பிரம்மஸ்திரம் போன்ற நடவடிக்கைகளால், சீனா மிகவும் மிரண்டு போயுள்ளது. அதனால் சீனா இந்தியாவை மிரட்டு பார்க்கிறது. அமெரிக்காவுடன் கைகோர்ப்பது இந்தியாவின் மிகப்பெரிய தவறாக இருக்கும் என சீனா கூறியுள்ளது. அதோடு, இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க சீன இராணுவம் முழுமையாக தயாராக உள்ளது என்றும் மிரட்டிப் பார்க்கிறது.


ALSO READ | மக்களின் எதிர்ப்பார்ப்பு நிறைவேறுமா ...கொரோனா குறித்த WHO பரபரப்பு அறிக்கை.... !!!


புதுடெல்லி (New Delhi) : லடாக்கில் (Ladak) நிலவும் எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக தில்லி  முதல் பெய்ஜிங் வரை பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தியாவும் அமைதியை தான் விரும்புகிறது. ஆனால், சீனா போரை விரும்புகிறது போலும். அதனால் தான் மிரட்டும் தொனியில் பேசி வருகிறது.


சீன செய்தித்தாள் குளோபல் டைம்ஸ் இந்தியாவை அச்சுறுத்தும் வேலையில் இறங்கியுள்ளது. சீன ஊடகங்கள் மீண்டும் இந்தியாவை (India) மிரட்டும் தொனியில், பேசி வருகின்றன. அமெரிக்காவின் ஆதரவை இந்தியா பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், அது மிகக்பெரிய தவறாக இருக்கும் என்றும்,  இந்தியாவுக்கு பதிலளிக்க சீன (China) இராணுவம் முழுமையாக தயாராக உள்ளதாகவும் குளோபல் டைம்ஸ் பத்திரிக்கை அச்சுறுத்தியுள்ளது.


ALSO READ | வடகொரிய சர்வாதிகாரி தனது சுக போக வாழ்க்கைக்காக இயக்கும் Office 39 Network....!!!


அமெரிக்கா (America)  மற்றும் சீனாவிற்கு இடையில் வர்த்தக போர் நிலவும் சூழ்நிலையில்,  கூடுதலாக, அமெரிக்காவில் (US) கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதன் காரணமாக, சீன மீது அமெரிக்கா கோபமாக உள்ளது. இது போன்ற சூழ்நிலையில், இந்திய சீனா எல்லை தொடர்பான பிரச்சனையில், அமெரிக்கா வெளிப்படையாக இந்திய ஆதரவு நிலையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில்,  இந்தியாவின் மீது 1962 ஆண்டு நடத்தப்பட்டதை போல் தாக்குதல் நடத்தப்படலாம் என அச்சுறுத்தியது.


சில நாட்களுக்கு முன்பு, சீனாவின் பத்திரிக்கையான குளோபல் டைம்ஸ், இந்தியா1962 ஆம் ஆண்டு எதிர் கொண்டதை போன்ற,  பெரும் சங்கடத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று எழுதியது.  இதிலிருந்து தெளிவாக தெரியும் ஒரு விஷயம் என்னவென்றால், இந்தியாவின் இராஜதந்திர நடவடிக்கை என்னும் பிரம்மஸ்திரத்தால், சீனா திகைத்து போய், பதற்றமாக உள்ளது என்பது தெளிவாகிறது. சீனா இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவதற்கு இதுவே காரணம்.


ஒட்டுமொத்தமாக, குளோபல் டைம்ஸில் வெளியிடப்பட்ட கட்டுரைகள், இந்தியாவின் இராஜதந்திர நடவடிக்கையின் காரணமாக ,சீனா எவ்வாறு பீதியில் உள்ளது என்பதையே காட்டுகிறது. கடந்த சில ஆண்டுகளில் இந்தியா சிறந்த முறையில் பதலடி கொடுத்து வரும் விதம், சீனாவின் தூக்கத்தை கெடுத்துள்ளது என்று தான் கூற வேண்டும்.