மக்களின் எதிர்ப்பார்ப்பு நிறைவேறுமா? கொரோனா குறித்த WHO பரபரப்பு அறிக்கை

கொரொனா தடுப்பு மருந்தான AZD1222  அதாவது ChAdOx1 nCoV-19 தொடர்பான பரிசோதனை இறுதி கட்டத்தில் உள்ளதாக WHO கூறியுள்ளது.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Jun 29, 2020, 12:59 PM IST
மக்களின் எதிர்ப்பார்ப்பு நிறைவேறுமா? கொரோனா குறித்த WHO பரபரப்பு அறிக்கை

உலகமே எதிர் நோக்கி இருக்கும் ஒரு விஷயம்  என்னவென்றால், அது கொரானாவிற்கான தடுப்பு மருந்து என்பது தான்.

உலகம் இப்போது கொரோனா வைரஸின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. இதற்கு விரைவில் தடுப்பூசி கண்பிடிக்கப்பட வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு அனைவர் மனதிலும் எழுந்துள்ளது. இது போன்ற சூழ்நிலையில்,  கொரோனா தடுப்பூசி விரைவில் கண்பிடிக்கப்படும் என உலக சுகாதார அமைப்பு (WHO)  கூறியிருப்பது, அனைவர் மனதிலும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. கொரொனா தடுப்பூசி AZD1222 என்றும் அழைக்கப்படுகிறது.  கொரோனா தடுப்பூசியான ChAdOx1 nCoV-19 தொடர்பான பரிசோதனை இறுதி கட்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

ALSO READ | வடகொரிய சர்வாதிகாரி தனது சுக போக வாழ்க்கைக்காக இயக்கும் Office 39 Network....!!!

புதுடெல்லி (New Delhi): கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடி வரும் உலகத்திற்கு, இறுதியாக ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. கொரோனா வைரஸுக்கு எதிரான  தடுப்பூசியை விரைவில் வர வேண்டும் என மக்கள் அனைவரும் நினைக்கும் நிலையில், இப்போது உலக சுகாதார அமைப்பு அதன் யதார்த்தத்தை கூறியுள்ளது.

தற்போது, ​​உலகளவில் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் COVID-19 தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இத்தகைய சூழ்நிலையில், இந்த கொரோனா வைரஸிலிருந்து எப்போது, ​​எப்படி விடுபடுவது என்று மக்கள் பதற்றமான மன நிலையில் உள்ளனர். இந்த கொரோனா வைரஸ், உலககில் உள்ள அனைத்து மக்களையும் ஏதோ ஒரு வகையில் பாதித்துள்ளது எனக் கூறலாம்.  தொற்று உள்ளவர்கள் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று இல்லாதவர்களும், பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இப்போது கொரோனா மிக விரைவில் ஒழிக்கப்பட்டு விடும் என்ற நம்பிக்கை துளிர்த்துள்ளது.

AZD1222 என்றும் அழைக்கப்படும் அஸ்ட்ராஜெனெகா பார்மா (AstraZeneca)  நிறுவனத்தின் COVID-19 தடுப்பு மருந்தான ChAdOx1 nCoV-19,  பரிசோதனையின் இறுதி கட்டத்தில் உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியாக பணிபுரியும் டாக்டர் சௌமியா சுவாமிநாதன் என்பவர், கொரோனா தடுப்பூசியான, AZD1222  என்ற தடுப்பு மருந்து மனிதர்கள் மீதான பரிசோதனைகளின் இறுதி கட்டத்தில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தடுப்பு மருந்து தயாரிக்கப்படுவதில் அஸ்ட்ராஜெனெகா பார்மா நிறுவனம் முன்னணியில் உள்ளது. இது தொடர்பான பரிசோதனை பிரிட்டன், தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசிலில் நடந்து வருகிறது. இந்த தடுப்பு மருந்து 10,260 பேருக்கு வழங்கப்படும். AZD1222 தடுப்பு மருந்து இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் (Oxford University) ஜென்னர் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.

ALSO READ | தேசிய பாதுகாப்பில் சமரசம் செய்த காங்கிரஸ்... லடாக் கவுன்சிலர் அதிர்ச்சி தகவல்...!!!

மற்றொரு மருந்து நிறுவனமான மாடர்னா (Moderna) கொரோனா தடுப்பூசி mRNA 1273 மீதான பரிசோதனையை விரைவாக மேற்கொண்டு வருகிறது. ஆனால் உலக சுகாதார அமைப்பான WHO தற்போது அஸ்ட்ராஜெனெகா பார்மா (AstraZeneca) நிறுவனம் மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளது.

கோவிட் -19 வைரஸ் தடுப்பூசி இந்த ஆண்டு இறுதிக்குள் சந்தைக்கு வரும் என்று அஸ்ட்ராசெனெகா நிறுவனம் கூறுகிறது. ஐரோப்பாவில், இந்த ஆண்டு இறுதிக்குள், கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து 40 கோடி பேருக்கு வழங்கப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.

200 கோடிக்கும் அதிகமான, கொரோனா தடுப்பு மருந்துகள் உலகெங்கிலும் வழங்கப்படும் என்று உலக சுகாதார அமைப்பு ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் கெப்ரேஸ், கொரோனாவைக் கட்டுப்படுத்தவும், மக்களின் உயிரைக் காப்பாற்றவும் பயனுள்ள தடுப்பூசி தேவை என்பது தெளிவாகிறது என்றும்  இது  விரைவாக கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்பதோடு, அதிக எண்ணிக்கையில் தேவைப்படும் என்பதே இப்போதைய நிலை என தெரிவித்தார்.  அனைவருக்கும் COVID-19  தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளதால், அதைத் தடுக்கவும், கண்டறிந்து சிகிச்சையளிக்கவும் அனைத்து வசதிகளும் அனைவருக்கு கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

உலக சுகாதார அமைப்பின் இந்த அறிக்கைகள், கொரோனாவுக்கு எதிரான போரில் புதிய நம்பிக்கை மற்றும் உத்வேகத்தை அளித்துள்ள என கூறலாம். . எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், விரைவில் உலகத்திற்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி கிடைக்கும்.