இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடைபெற்று 19 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இந்த கோழைத்தனமான தாக்குதலை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம் என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்
 
19 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில், லஷ்கர்-இ-தொய்பா (Lashkar-e-Taiba) மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது (Jaish-e-Mohammad) பயங்கரவாதிகள் அடங்கிய ஐந்து பேர் கொண்ட தற்கொலைத் தாக்குதல் படை இந்திய நாடாளுமன்றத்தைத் தாக்கியது, அன்று மக்களவை அமர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது.  
 
2001 ல் நமது நாடாளுமன்றத்தின் மீதான கோழைத்தனமான தாக்குதலை நாடு ஒருபோதும் மறக்காது என்று பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். தாக்குதலின் போது உயிர்களைப் பாதுகாத்து இறந்த வீரர்களுக்கும் பிரதமர் அஞ்சலி செலுத்தினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"2001 ல் இந்த நாளில் எங்கள் பாராளுமன்றத்தின் மீதான கோழைத்தனமான தாக்குதலை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம். எங்கள் நாடாளுமன்றத்தைப் பாதுகாத்து உயிர் இழந்தவர்களின் வீரம் மற்றும் தியாகத்தை நாங்கள் நினைவு கொள்கிறோம். இந்தியா எப்போதும் அவர்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறது, அவர்களுக்கு என்றென்றும் நன்றி செலுத்தும் ”என்று பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.



19 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில், லஷ்கர்-இ-தொய்பா (Lashkar-e-Taiba) மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது (Jaish-e-Mohammad) பயங்கரவாதிகள் அடங்கிய ஐந்து பேர் கொண்ட தற்கொலைத் தாக்குதல் படை இந்திய நாடாளுமன்றத்தைத் (Parliament) தாக்கியது, அன்று மக்களவை அமர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நேரத்தில் அவைகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன, ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும், பணியாளர்களும் வளாகத்திற்குள் இருந்தனர்.  
 
Also Read | புதிய நாடாளுமன்ற சபைக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் - அடுத்த தலைமுறை பெருமிதம் கொள்ளும்
 
நாடாளுமன்ற வளாகத்தில் பயங்கரவாதிகள் நுழைவதைத் தடுத்தபோது, மொத்தம் ஒன்பது பேர் பலியானார்கள். டெல்லி காவல்துறையின் ஐந்து பாதுகாப்புப் பணியாளர்கள், சிஆர்பிஎப்-இன் (CRPF) ஒரு பெண் கான்ஸ்டபிள் மற்றும் நாடாளுமன்ற கண்காணிப்பு மற்றும் வார்டு பிரிவின் இரண்டு பாதுகாப்பு உதவியாளர்கள் என பலர் இறந்தனர். தோட்டத்தில் பணிபுரிந்துக் கொண்டிருந்த தோட்டக்காரர் ஒருவரும்,  உயிரிழிந்தனர். நாடாளுமன்ற தாக்குதல் நடத்தியதற்கான காரணம் என்ன? சில எம்.பி.க்களை பிணைக்கைதிகளாக வைப்பது அவர்களின் திட்டம். ஆனால், அவர்களின் திட்டத்தை பாதுகாப்புப் படையினர் முறியடித்தார்கள். துயரமும், துணிச்சலும், விவேகமும் நிறைந்த இந்த சம்பவத்தின் 19-ஆவது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
 
இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஐந்து பயங்கரவாதிகளும் டிசம்பர் 13 ம் தேதி பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டின் போது கொல்லப்பட்டனர்.  நான்கு பேர் கைது செய்யப்பட்டு சில நாட்களிலேயே அவர்கள் இந்த தாக்குதலுக்கு திட்டமிட்ட சூத்திரதாரிகள் என குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.  முகமது அஃப்சல் குரு (Mohammed Afzal Guru), ஷெளகத் உசேன் (Shaukat Hussain), அஃப்சன் குரு (Afsan Guru), எஸ்.ஏ.ஆர். ஜீலானி (SAR Geelani ஆகிய நான்கு பேருக்கு எதிரான வழக்கு சுமார் ஒரு தசாப்த காலம் நடைபெற்றது. டெல்லி உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் இறுதியில் இருவரை விடுவித்தது. மரண தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குரு, ஷெளகத் ஹுசேன் குருவுக்கு தூக்கு தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது. கிலானி, அஃப்சன் குரு ஆகியோர், வழக்கில் இருந்து விடுவித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.
 
Also Read | பொறுமையை சோதிக்கும் சீனா; இந்தியா சாவாலை வெல்லும்: எஸ்.ஜெய்சங்கர்
 
அஃப்சல் குரு மற்றும் ஷெளகத் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அஃப்சல் குருவின் தண்டனையை உறுதிப்படுத்தியது. ஷெளகத்தின் மரண தண்டனை, பத்து ஆண்டுகள் கடுங்காவல் சிறையாக குறைக்கப்பட்டது. 2010-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஷெளகத் ஹுசேன் குரு நன்னடத்தை அடிப்படையில், விடுதலை செய்யப்பட்டார். 2013, பிப்ரவரி மாதம் ஒன்பதாம் தேதி அஃப்சல் குரு தூக்கிலிடப்பட்டு அவரது தண்டனை நிறைவேற்றப்பட்டது.


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR