புது டெல்லி: புதிய நாடாளுமன்ற வளாகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister Narendra Modi) இன்று (வியாழக்கிழமை) அடிக்கல் நாட்டினார். பிரதமர் மோடி தனது உரையில் இன்று ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள் மற்றும் 130 கோடி இந்தியர்களுக்கு பெருமைமிக்க நாள் என்று கூறினார்.
இன்று வரலாற்றில் ஒரு மைல்கல்:
இந்தியாவின் ஜனநாயக வரலாற்றில் (India's Democratic History) இன்று ஒரு மைல்கல் என்று பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) கூறினார். இந்திய மக்களான நாங்கள் எங்கள் பாராளுமன்றத்தின் இந்த புதிய கட்டிடத்தை ஒன்றாகக் கட்டுவோம், இந்தியா 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, நமது பாராளுமன்றத்தின் புதிய கட்டிடம் அந்த விழாவின் முக்கிய பங்காக மாற வேண்டும்.
#WATCH Prime Minister Narendra Modi lays foundation stone of New Parliament Building in Delhi pic.twitter.com/gF3w7ivTDe
— ANI (@ANI) December 10, 2020
முதல் முறையாக ஜனநாயக கோவிலை வணங்கினேன்:
பிரதமர் மோடி தனது உரையில், முதல் முறையாக நாடாளுமன்றத்தை அடைந்த தருணத்தை நினைவு கூர்ந்தார். அவர் கூறினார். "என் வாழ்க்கையில் அந்த தருணத்தை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. 2014 இல் முதல் முறையாக ஒரு எம்.பி. ஆக நாடாளுமன்ற வளாகத்திற்கு (Parliament House) வர வாய்ப்பு கிடைத்தது. ஜனநாயகத்தின் இந்த கோவிலுக்குள் நுழைவதற்கு முன்பு, நான் தலை குனிந்து, இந்த ஜனநாயக கோவிலை (Temple of Democracy) வணங்கினேன்".
ALSO READ | COVID-19 தடுப்பூசி இயக்கத்தில் மொபைல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: பிரதமர் மோடி
தற்போதைய பாராளுமன்றம் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது:
பிரதமர் மோடி கூறுகையில், "நமது தற்போதைய நாடாளுமன்ற சபை சுதந்திர இயக்கத்தையும் பின்னர் சுதந்திர இந்தியாவையும் கட்டியெழுப்புவதில் அதன் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. சுதந்திர இந்தியாவின் முதல் அரசாங்கமும் இங்கு அமைக்கப்பட்டது, நாட்டின் முதல் நாடாளுமன்றமும் இதுதான். மேலும் கூறுகையில், "பழைய பாராளுமன்ற சபை சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவுக்கு வழிகாட்டிய இருந்திருக்கிறது. புதிய நாடாளுமன்ற கட்டிடம் (New Parliament Building) தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை நிர்மாணிப்பதற்கான சாட்சியாக மாறும் என்றார்.
Today is a historic day as the foundation of the New Parliament building has been laid. We the people of India together will construct this new building of the Parliament: PM Modi pic.twitter.com/zgqoNGUVEq
— ANI (@ANI) December 10, 2020
ஓய்வெடுக்க விரும்பும் நாடாளுமன்ற சபை:
பிரதமர் கூறுகையில், "தற்போதைய பாராளுமன்றம் சக்திவாய்ந்த வரலாற்றைக் கொண்டது. இந்த கட்டிடம் இப்போது சுமார் 100 ஆண்டுகள் பழமையானது. பல ஆண்டுகளாக, இது தேவைக்கேற்ப மேம்படுத்தப்பட்டுள்ளது. பல புதிய சீர்திருத்தங்களுக்குப் பிறகு, இந்த நாடாளுமன்ற சபை இப்போது ஓய்வெடுக்கும் காலத்தில் உள்ளது. புதிய பாராளுமன்ற கட்டடத்தின் தேவை பல ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், 21 ஆம் நூற்றாண்டு (21st Century) இந்தியாவுக்கு புதிய நாடாளுமன்ற கட்டிடம் கிடைக்க வேண்டும் என்பது நம் அனைவரின் பொறுப்பாகும். இந்த அத்தியாயத்தில் இது தொடங்கப்படுகிறது.
புதிய பாராளுமன்ற மாளிகை குறித்து அடுத்த தலைமுறை பெருமிதம் கொள்ளும்:
தனது உரையில் பிரதமர் மோடி கூறுகையில், "இன்று தேசிய போர் நினைவுச்சின்னம் இந்தியா வாயிலுக்கு அப்பால் ஒரு புதிய அடையாளத்தை உருவாக்கியுள்ளது போலவே, பாராளுமன்றத்தின் புதிய கட்டிடமும் அதன் அடையாளத்தை நிலைநிறுத்தும். சுதந்திர இந்தியாவில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற சபையைப் பார்க்க வரும் தலைமுறையினர் (Next Generation) பெருமைப்படுவார்கள். சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளை நினைவில் கொண்ட பின்னர் இது கட்டப்பட்டுள்ளது.
I can never forget the moment in my life when I had the opportunity to come to Parliament House for the first time in 2014 as an MP. Then before stepping into this temple of democracy, I had bowed my head and saluted this temple of democracy: PM Modi pic.twitter.com/MA0vtYiKIo
— ANI (@ANI) December 10, 2020
ஜனநாயகம் என்பது வேறுபாடுகளைத் தீர்ப்பதற்கான ஒரு வழிமுறையாகும்:
21 ஆம் நூற்றாண்டின் உலகம் இந்தியா ஒரு முக்கியமான ஜனநாயக சக்தியாக முன்னேறுவதைக் காண்கிறது என்று நாம் பெருமையுடன் சொல்லலாம். இந்தியாவில் ஜனநாயகம் எப்போதுமே ஆட்சியுடன் வேறுபாடுகளைத் தீர்ப்பதற்கான ஒரு வழியாகும்.
ALSO READ | புதிய நாடாளுமன்ற கட்டிடம்: டிசம்பர் 10ம் தேதி பிரதமர் அடிக்கல் நாட்டுவார்
பொது சேவையில் வேறுபாடுகள் இருக்கக்கூடாது:
அரசியலில் வேறுபாடுகள் இருக்கலாம், கட்சிகளிடையே வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் பொதுமக்களுக்கு சேவை செய்ய அரசு இருக்கிறது. இந்த இலக்கில் வேறுபாடுகள் இருக்கக்கூடாது. விவாதங்கள், பாராளுமன்றத்திற்குள் இருந்தாலும், பாராளுமன்றத்திற்கு வெளியே இருந்தாலும், தேசத்திற்கான சேவையின் தீர்மானம், தேசிய நலனுக்கான அர்ப்பணிப்பு ஆகியவை தொடர்ந்து பிரதிபலிக்கப்பட வேண்டும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR