December 13 2001, நாடாளுமன்ற தாக்குதல் நினைவு நாள்: அன்று நடந்தது என்ன? ஒரு பார்வை!!
டிசம்பர் 13, 2001 அன்று நடந்த பயங்கர சம்பவத்தின் நினைவுகள், நாட்டு மக்களின் மனங்களில் இன்னும் நீங்காமல் அப்படியே உள்ளன.
புதுடெல்லி: இருபது ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய ஜனநாயகத்தின் ஆலயமாக கருதப்படும் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தபட்டது. இந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் நாட்டு மக்களின் உணர்ச்சிகளை உலுக்கிப் போட்டது.
டிசம்பர் 13, 2001 அன்று நடந்த பயங்கர சம்பவத்தின் நினைவுகள், நாட்டு மக்களின் மனங்களில் இன்னும் நீங்காமல் அப்படியே உள்ளன.
டிசம்பர் 13, 2001 அன்று என்ன நடந்தது?
பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா (LeT) மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது (JeM) தீவிரவாத அமைப்புகளின் ஐந்து பயங்கரவாதிகள் உள்துறை அமைச்சகம் மற்றும் பாராளுமன்றத்தின் போலி ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட அம்பாசிடர் காரில் நாடாளுமன்ற வளாகத்துக்குள் ஊடுருவினர்.
ஏகே 47 துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் மற்றும் கைத்துப்பாக்கிகளை ஏந்தியபடி, நாடாளுமன்ற (Parliament) வளாகத்தைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு வளையங்களில் அத்துமீறி நுழைந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தத் தொடங்கினர். அவர்கள் காரை மேலும் உள்ளே செலுத்தியபோது, வளாக ஊழியர்களில் ஒருவரான கான்ஸ்டபிள் கமலேஷ் குமாரி யாதவுக்கு அவர்களின் நடமாட்டத்தில் சந்தேகம் ஏற்பட்டது.
பயங்கரவாதிகளின் காரை அணுகிய முதல் பாதுகாப்பு அதிகாரி கமலேஷ் குமாரி யாதவ் ஆவார். அவருக்கு சந்தேகம் அதிகமாகவே, தான் பணியில் இருந்த கேட் எண் 1 ஐ மூடுவதற்காக ஓடினார். தாங்கள் நினைத்தபடி காரை செலுத்த முடியாமல் போகவே, பயங்கரவாதிகள் கமலேஷ் குமாரி யாதவ் மீது 11 முறை துப்பாக்கியால் சுட்டனர்.
யாதவ் அந்த இடத்திலேயே இறந்தார். ஆனால், அதற்கு முன்பு அவர் தற்கொலை படை தாக்குதல் நடத்தவிருந்த ஒரு பயங்கரவாதியின் சதியை தடுத்து விட்டுதான் உயிர் துறந்தார்.
யாதவை கொன்ற பிறகு, பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.
சுமார் 30 நிமிடங்களுக்கு இந்த பயங்கரம் நீடித்தது
சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த பயங்கரமான சம்பவத்தில் மொத்தம் 9 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 18 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்தவந்த பயங்கரவாதிகளும் முக்கிய கட்டிடத்துக்கு செல்லும் முன்னரே பாதுகாப்பு அதிகாரிகளால் கொல்லப்பட்டனர்.
பயங்கரவாதம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் தேசிய தலைநகரில் உள்ள பிற கடுமையான குற்றங்களைத் தடுக்கவும், கண்டறியவும், விசாரிக்கவும் 1986 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட தில்லி காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் சிறப்புப் பிரிவு இந்த விசாரணைக்கு பொறுப்பேற்றது.
20 ஆண்டுகாலத்துக்கு முன்னர் நடந்த இந்த பயங்கரவாத தாக்குதலின் நினைவுகளை நினைவு கூர்ந்த அப்போதைய காவல்துறை துணை ஆணையர் அசோக் சந்த், தாக்குதல் நடந்தபோது தான் சிறப்புப் பிரிவு அலுவலகத்தில் இருந்ததாக ஐஏஎன்எஸ்ஸிடம் தெரிவித்தார்.
"எங்களுக்கு தகவல் கிடைத்ததும், நான் எனது குழுவுடன் நாடாளுமன்றத்திற்கு விரைந்தேன்," என்று சந்த் கூறினார். அவர் அந்த இடத்தை அடைந்தபோது, தாக்குதல் இன்னும் நடந்து கொண்டிருந்தது.
" நான் அங்கு சென்ற போது நிலைமை இன்னும் திரவமாக இருந்தது. அதற்குள் சிறப்புப் பிரிவின் மற்ற குழுக்களும் அங்கு வந்தடைந்தன," என்று அவர் கூறினார்.
ALSO READ | வங்கி மூழ்கினாலும் உங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும்: பிரதமர் மோடி
அடுத்த சில நிமிடங்களில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீரர்கள் அனைத்து பயங்கரவாதிகளையும் கொன்றனர். தாக்குதலின் போது நாடாளுமன்றத்தில் நியமிக்கப்பட்டிருந்த சிஆர்பிஎஃப் பட்டாலியன், ஜம்மு காஷ்மீரில் இருந்து அப்போதுதான் திரும்பி வந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
"ஆகையால் அவர்கள் இதுபோன்ற எதிர்பாராத நிகழ்வுகளுக்குத் தயாராக இருந்தனர் மற்றும் இது போன்ற சூழலை எப்படி கையாள்வது என அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது” என்று மற்றொரு அதிகாரி கூறினார்.
நிலைமையை விரைவாகக் கட்டுப்படுத்தியதில் பாதுகாப்புப் படையினரின் அதீத துணிச்சலான அணுகுமுறை காரணம் என்றாலும், நாடாளுமன்றத்தின் கண்காணிப்பு மற்றும் வார்டு ஊழியர்களும் பல உயிர்களைக் காப்பாற்றுவதில் முக்கியப் பங்காற்றினர்.
"தாக்குதல் தொடங்கிய உடனேயே கண்காணிப்பு மற்றும் வார்டு ஊழியர்கள், நாடாளுமன்ற கட்டிடத்தின் அனைத்து கதவுகளையும் மூடிவிட்டனர். இதனால் பயங்கரவாதிகள் முக்கிய கட்டிடத்துக்குள் நுழைவதைத் தடுத்தனர்," என்று ஒரு அதிகாரி கூறினார்.
அப்சல் குரு உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்
தாக்குதல் நடந்த உடனேயே, விசாரணை நடத்தப்பட்டதாக சந்த் கூறினார். வெறும் 72 மணி நேரத்தில், டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு இந்த வழக்கின் பல முக்கிய விஷயங்களை கண்டுபிடித்தது. இது தொடர்பாக முகமது அப்சல் குரு, சவுகத் ஹுசைன், அப்சல் குரு மற்றும் எஸ்ஏஆர் கிலானி ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
அப்சல் குரு டெல்லியின் திகார் சிறையில் பிப்ரவரி 2013 இல் தூக்கிலிடப்பட்டார். சவுகத் ஹுசைன் சிறையில் தண்டனை அனுபவித்தார்.
இந்த தாக்குதலின் 20வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை டெல்லி போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
ALSO READ | இந்துத்துவவாதிகளை தூக்கி எறியுங்கள் - ராகுல்காந்தி ஆவேசம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR