நாடாளுமன்றத்தில் இனி கேண்டீன் உணவிற்கு மானியம் இல்லை.. விலைப் பட்டியல் இதோ..!!!
நாடாளுமன்றத்தில், இனி நாளை முதல் மானிய விலையில் உணவு பொருட்களை வாங்க இயலாது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனி, கேண்டீனில் சாப்பிட அதிக பணம் கொடுக்க வேண்டும்.
நாடாளுமன்ற பட்ஜெட் ( Budget) கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், சுமார் 10 நாட்களுக்கு முன்னதாக, சபாநாயகர் ஓம் பிர்லா செய்தியாளர்களிடையே உரையாற்றியபோது நாடாளுமன்ற கேண்டீனில் உணவு மானியம் முற்றிலுமாக நீக்கப்படுவதாக அறிவித்தார். இதனால், ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு 8 கோடி ரூபாய் மிச்சமாகும் என கூறப்படுகிறது.
நாடாளுமன்றத்தில், இனி நாளை முதல் மானிய விலையில் உணவு பொருட்களை வாங்க இயலாது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனி, கேண்டீனில் சாப்பிட அதிக பணம் கொடுக்க வேண்டும்.
இதற்கான விலை பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற ( Parliament) கேண்டீன் மெனுவில் பிரபலமான உணவுகளில், ரூ .65 க்கு விற்கப்பட்ட ஹைதராபாத் மட்டன் பிரியாணியின் விலை இப்போது ரூ .150 ஆகவும், ரூ.12 க்கு விற்கப்பட்ட வேகவைத்த காய்கறிகள் ரூ .50 ஆகவும் விற்கப்படும்.
புதிய விலைப் பட்டியலின்படி, ஒரு சைவ பஃபேக்கு ரூ .100 செலவாகும், அசைவ உணவு பஃபேக்கான விலை ரூ .700 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற கேண்டீனில் மெனுவில் மலிவான பொருள் என பார்த்தால் அது சப்பாத்தி தான். ஒரு சாப்பாத்தியின் விலை ரூ .3 ஆகும்.
நாடாளுமன்ற கேண்டீனின் (Parliament canteen) புதிய விகித பட்டியல்
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் அமர்வு (Budget Session) தொடங்கும் நிலையில், திருத்தப்பட்ட விலைகள் ஜனவரி 29 முதல், அதாவது நாளை முதல் நடைமுறைக்கு வரும்.
ALSO READ | மோடி அரசின் அதிரடி முடிவு; இனி நாடாளுமன்ற கேண்டீனில் விற்கும் உணவிற்கு மானியம் இல்லை
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR