மோடி அரசின் அதிரடி முடிவு; இனி நாடாளுமன்ற கேண்டீனில் விற்கும் உணவிற்கு மானியம் இல்லை

நாடாளுமன்ற கேண்டீனில் உணவு மானியம் முற்றிலுமாக நீக்கப்படுவதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 19, 2021, 08:33 PM IST
  • நாடாளுமன்ற கேண்டீனில் உணவு மானியம் முற்றிலுமாக நீக்கப்படுவதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.
  • வரவிருக்கும் பட்ஜெட் அமர்வின் போது கோவிட் -19 நெறிமுறைகளை கடுமையாக பின்பற்ற தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்.
மோடி அரசின் அதிரடி முடிவு; இனி நாடாளுமன்ற கேண்டீனில் விற்கும் உணவிற்கு மானியம் இல்லை title=

நாடாளுமன்ற கேண்டீனில் உணவு மானியம் முற்றிலுமாக நீக்கப்படுவதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.

வரவிருக்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக செய்தியாளர்களிடையே, சபாநாயகர்  ஓம் பிர்லா செய்தியாளர்களிடையே உரையாற்றியபோது மக்களவை இதைத் தெரிவித்தார். வரவிருக்கும் அமர்வில் மக்களவை மற்றும் மாநிலங்களவை எவ்வாறு செயல்படும் என்பதற்கான கால அட்டவணை குறித்து ஓம் பிர்லா தெரிவித்தார். இதனால், ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு 8 கோடி ரூபாய் மிச்சமாகும் என கூறப்படுகிறது

"கோவிட் -19 (COVID-19) தொற்றுநோய்க்கு மத்தியில், ஜனவரி 29 முதல் பட்ஜெட் அமர்வு தொடங்க உள்ளது. மாநிலங்களவை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும், மக்களவை மாலை 4 மணி முதல் 9 மணி வரையிலும் நடக்கும். ஜீரோ ஹவர் (Zero Hour) மற்றும் கேள்வி நேரம் நடைபெறும். எம்.பி.க்கள் அனைவரும்  ஆர்டி-பி.சி.ஆர் ( RT-PCR test) பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கூறப்பட்டுள்ளது" என சபாநாயகர்ஓம் பிர்லா கூறினார்.

இது தவிர, வரவிருக்கும் பட்ஜெட் அமர்வின் (Budget Session) போது கோவிட் -19 நெறிமுறைகளை கடுமையாக பின்பற்ற தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்றும் ஓம் பிர்லா குறிப்பிட்டுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிர்லா, கோவிட் -19 தொற்றுநோய் உலகெங்கிலும் உள்ள பாராளுமன்றங்களின் செயல்பாட்டை பாதித்துள்ளது என குறிப்பிட்டார்.

தொற்றுநோய் நெருக்கடியின் போது கூட, கொரோனா தொடர்பான அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளுக்கும் இணங்க சபையின் நடவடிக்கைகள் நடத்தப்பட்டன. மேலும் நாடாளுமன்ற  வளாகத்தில் பணிபுரியும் அனைவருக்கும் சுகாதார பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது.

பாராளுமன்றத்தின் செயல்பாட்டில் இ-பாராளுமன்றம் மற்றும் மின்னணு அலுவலகம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்களின் பொறுப்புகளை திறம்பட நிறைவேற்றுவதில் உகந்த சூழலை வழங்கியுள்ளது என்று பிர்லா தெரிவித்தார்.

ALSO READ | நேதாஜியின்  பிறந்த நாள் பராக்கிரம தினமாக கொண்டாடப்படும்: மத்திய அரசு

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News