புதுடெல்லி: இந்தியாவின் எல்லைக்குள் எந்தவொரு முடிவையும் எடுக்க இந்திய நாடாளுமன்றத்திற்கு அனைத்து உரிமையும் இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, இன்று மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மசோதாவை தாக்கல் செய்தார். அந்த மசோதா மீதான விவாதங்கள் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 


இந்தநிலையில், இந்த மசோதா குறித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியது, இந்தியாவின் எல்லைக்குள் எந்தவொரு முடிவையும் எடுக்க இந்திய நாடாளுமன்றத்திற்கு அனைத்து உரிமையும் இருப்பதாக தெரிவித்துள்ளார். 370 வது பிரிவை நீக்குவதற்கு இங்கு இருவர் தவிர வேறு யாரும் எதிர்க்கவில்லை. 370 ஐ அகற்ற வேண்டும் என்றும் அவர்களும் விரும்புகிறார்கள். ஆனால் வாக்கு வங்கி குறித்து கேள்விகள் அவர்களுக்கு முன் வருவதால், அவர்களால் அதை செய்ய முடியவில்லை. மோடி தலைமையிலான அரசு நிறைவேற்றி உள்ளது.


நாட்டில் உள்ள குழந்தைகள் கூடத் தெரியும் காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று, ஆனால் இங்கு சிலர் அதுக்குறித்து கேள்வி எழுப்புகிறார்கள்.  அவர்கள் ஏன் உ.பி. நாட்டின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியா என்று, தமிழகம் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியா? என்று கேள்விகளை எழுப்புவதில்லை. ஏனென்றால், காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கிறதா? இல்லையா? என்பது இந்த நாட்டின் மற்றும் உலகத்தின் மனதில் சட்டப்பிரிவு 370 ஒரு சந்தேகத்தை உருவாக்கியது.


ஜம்மு காஷ்மீரில் நிலைமை இயல்பானதாக மாறினால், முழு மாநில அந்தஸ்தை வழங்க நாங்கள் தயங்க மாட்டோம் என்று, நாட்டின் மக்களுக்கும் முக்கியமாக காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன் என்று அமித் ஷா கூறினார். 371 வது பிரிவைப் பற்றி கேள்விகள் எழுப்புவதன் மூலம் நாடு தவறாக வழிநடத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.


எந்த நாட்டின் இராணுவத்திற்கும் எல்லைகளை மீறும் உரிமை இல்லை என ஐ.நா.வின் கோரிக்கையை இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டது. ஆனால் 1965-ல் பாகிஸ்தானால் எல்லை மீறப்பட்டபோது, ஐ.நா.வின் கோரிக்கை செயலிழந்தது என்றும அமித் ஷா கூறினார்.