டெல்லி மத்திய தகவல் ஆணையத்தின் புதிய வளாகத்தை இன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைத்தார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நவீன ஐ.டி மற்றும் வீடியோ கான்பரன்சிங் அமைப்புகளுடன் வடிவமைக்கப்பட்டு இந்த கட்டிடமானது தேசிய கட்டிட நிர்மாணக் கழகத்தால் நிறுவப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தினை திறந்துவைத்து பேசிய மோடி அவர்கள் தெரிவித்ததாவது...



நாட்டின் முன்னேற்றத்திற்கான முயற்சிகளானு பாராளுமன்றத்தில் இருந்து மக்களின் வீதிகளுக்கு சென்றடையும் வகையினில் இருத்தல் வேண்டும் என்றார்.


மேலும் அவர் தெரிவிக்கையில் "மக்களது மன ஆறுதலின் அடிப்படையில் கமிஷன் தனது திட்டங்களை மேம்படுத்திக் கொண்டிருப்பதாக நான் நம்புகிறேன், எமது ஜனநாயகத்தின் வலுவான தூண் என்று நான் நம்புவது மக்களை தான். கடந்த நான்கு ஆண்டுகளாக குடிமக்களுக்கு தகவல் கொடுக்கவும், நவீன தகவல் நெடுஞ்சாலைகளின் ஐந்து தூண்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவை கேள்வி எழுப்புதல், கவனித்தல், பரஸ்பரம், செயல்படுத்துதல் மற்றும் தெரியபடுத்துதல் ஆகும்.


முதல் தூணான கேள்வி எழுப்புதல் பற்றி கேட்டால், அரசாங்கக் கொள்கைகள் மற்றும் திட்டங்களில் மக்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் 
இரண்டாவது தூணானது 'கவனித்தல்' என்பது இன்றைய இந்தியாவில் மக்களுக்குக் கேட்கும் ஒரு அரசு. சமூக ஊடகங்களில் நீங்கள் வழங்கிய ஆலோசனைகளை கவனித்து. மக்களின் அக்கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு எமது கொள்கைகளில் மாற்றங்களைச் செய்துள்ளோம்.


நவீன தகவல் நெடுஞ்சாலையின் மூன்றாவது தூண், 'பரஸ்பரம்', இது முந்தைய இரண்டு அம்சங்களைப் போலவே முக்கியமானது என்றும், இருவருக்கும் இடையில் ஒரு தொடர்பு இருக்கும் போது, ​​அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையில் ஒரு உணர்வுபூர்வமான இணைப்பு இருக்கிறது என்றும் நான் நம்புகிறேன். 


நான்காவது தூண் 'செயல்படுத்துதல்' என்பது, கேட்பதற்குப் பிறகு எவ்வித நடவடிக்கையும் எடுக்காவிட்டால், அனைத்து கடின உழைப்புகளும் வீணாகிவிடும். எனவே அதன் மீது அரசாங்கம் கவனமாகவே உள்ளது.


நவீன தகவல் நெடுஞ்சாலை ஐந்தாவது தூணான தெரியப்படுத்துதல் என்பது மிக முக்கியமானது ஆகும். இது மக்களின் செயல்களை பற்றிய சரியான உண்மைகளை வழங்குவதற்கான கடமை, திட்டங்கள் அரசு செயற்படுத்த உதவுகிறது.


தொழில்நுட்பமாக்கப் பட்ட இந்தியாவில் அனைத்து சேவைகளும் டிஜிட்டல் முறையாக்கப்பட்டுள்ளதால் பெரிதும் பயன்னடைபவர் மக்கள் தான் எனவும், இந்த சேவை மேலும் தொடர பல மேம்பாட்டு செயல்பாடுகள் செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.