தபால் நிலையங்களில் ரயில் பயண சீட்டுகளை முன்பதிவு செய்வது குறித்த ஆணை ஒன்றில் இந்திய ரயில்வே துறை ஒப்பந்தமிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஒப்பந்தத்தின் படி பயணிகள் இனி தங்களுக்கு அருகில் உள்ள தபால் நிலையங்களிலேயே ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.


இந்திய ரயில்வே துறையின் பெரும்பான்மை வரவு பயணிகளின் டிக்கொட் முன்பதிவு அம்சத்தின் மூலமே வருகிறது. இதனால் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு முறையில் பல சிறப்பம்சங்களை ரயில்வே துறை அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது பயணிகளின் சிறமத்தை குறைக்க தங்களது டிக்கெட்டுகளை அவர்களுக்கு அருகில் இருக்கும் தபால் நிலையங்களில் பெருவது குறித்து இந்திய தபால் துறையுடன் ஒப்பந்தமிட்டுள்ளது.


குறிப்பிட்ட நகரங்களில் உள்ள இரயில்வே நிலையங்கள் மற்றும் இந்த வசதி செயல்படுத்த தேவையான வசதிகளைப் பொருத்து இந்த சிறப்பு மையங்களின் எண்ணிக்கை மாநிலங்களில் மாற்றம் அடையும் எனவும் ரயில்வே துறை அறிவித்துள்ளது.


அதன்படி கொடுக்கப்பட்ட பட்டியல்...



தற்போது இரயில் பயணங்களுக்கு பதியப்படும் டிக்கெட்டுகளில் 65% டிக்கெட்டுகள் www.irctc.co.in இணையதளத்தில் மூலமே பதியப்படுகிறது. 


இந்நிலையில் தபால் நிலையங்களில் டிக்கெட் பதிவு செய்யப்படும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டார் இந்த சதவிகித அளவு கனிசமாக உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகமா இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.