பதன்கோட் தாக்குதல்: என்ஐஏ குற்றப்பத்திரிக்கை தாக்கல்
பதன்கோட் விமானப்படை தளத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டது ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாத அமைப்பு என தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்ஐஏ) தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி: பதன்கோட் விமானப்படை தளத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டது ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாத அமைப்பு என தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்ஐஏ) தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதன்கோட் தாக்குதல் குறித்து மசூர் ஆசாத் உள்ளிட்ட 4 பேர் தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 2-ம் தேதி பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்திற்குள் புகுந்த 6 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.இந்திய பாதுகாப்பு படையினரும் இதற்க்கு எதிராக பதிலடி கொடுத்தனர். இந்த மோதலில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
பதன்கோட் விமானப்படை தளத்திற்குள் ஊடுருவிய தீவிரவாதிகள், பாகிஸ்தானில் இருந்து வந்த ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை சேர்ந்தவர்கள் என தெரிகிறது. எனவே அந்த இயக்கம் மற்றும் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானை இந்தியா அறிவுறுத்தியது.
இது தொடர்பாக அந்த இயக்கத்தின் தலைவர் மசூத் அசார், அவரது சகோதரர் அப்துல் ரவுப் அஸ்கர் உள்பட 4 தீவிரவாதிகள் தொடர்பான சில ஆதாரங்களும் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி பல்வேறு ஆதராங்களை சேகரித்த தேசிய புலனாய்வு முகமை பஞ்சகுலா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
குற்றப்பத்திரிகையில் விமான தளத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதில் 4 பேரின் பங்கு குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மசூர் ஆசாத்தின் சகோதரர் ரஃப் அஷ்காரும் குற்றப்பத்திரிகையில் பெயர் இடம் பெற்றுள்ள 4 பேரில் அடங்குவார். ப
தன்கோட் தாக்குதலுக்கு பிறகு வீடியோ மேசேஞ் ஒன்றை வெளியிட்டு பயங்கரவாதிகளின் பங்கை புகழ்ந்து இருந்தவன் ராப் அஷ்கார்.
இந்நிலையில் தீவிரவாதிகள் முப்தி அப்துல் ரவுப் அஸ்கார், ஷாகித் லத்தீப், கஷிப் ஜான் ஆகியோர் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன.
கடந்த 1999 இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை கடத்தி பணையக்கைதிகளை விடுவிப்பதற்காக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டவன் ராப் அஷ்கர் ஆவான்.