குஜராத்தில் பட்டேல் இனத்தவர்களுக்கு இடஒதுக்கீடு கேட்டு கைதாகி சிறை சென்ற ஹர்திக் பட்டேல் இன்று தனது தோழியை திருமணம் செய்து கொண்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குஜராத்தில் பிறந்த ஹர்திக் பட்டேல், பட்டேல் சமுதாய தலைவராக பதவி வகித்து அவரது சமுதாயத்துக்கு அரசிடம் இருந்து பலவித சலுகைகளை வாங்கிக்கொடுத்து பிரபலமானவர். குஜராத் அரசியலில் தவிர்க்கமுடியாத ஓர் ஜாதி சங்கத் தலைவர் இவர். அனைத்து கட்சிகளும் பட்டேல் சமுதாயத்தினர் ஓட்டுக்காக இவரிடமே அதரவு கோர வரிசையில் நிற்கவேண்டும். இவர் காங்கிரஸ் கட்சியை ஆதரித்தார்.


இதனையடுத்து குஜராத் மாநிலம், சுரேந்திராநகர் மாவட்டம், திக்சார் கிராமத்தில் அமைந்துள்ள கோவிலில் கின்ஜல் பரேக் - ஹர்திக் பட்டேல் திருமணம் இன்று நடைபெற்றது. இந்த திருமண விழாவில் உறவினர்கள் நண்பர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். அரசியல் பிரமுகர்கள் யாருக்கும் அழைப்பு இல்லை.