Pegasus: ஜனநாயகத்தின் ஆன்மாவை மோடி, அமித் ஷா காயப்படுத்தி விட்டார்கள்: ராகுல் தாக்கு
இந்தியாவுக்கு எதிராக இஸ்ரேலிய பெகாசஸ் உளவு சாப்ட்வேர் பயன்படுத்தி, பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் `நாட்டின் ஜனநாயகத்தின் ஆன்மாவைத் தாக்கியுள்ளனர்` என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடில்லி: பெகாசஸ் உளவு சாப்ட்வேர் தொடர்பாக நரேந்திர மோடி (Narendra Modi) அரசாங்கத்தை குறிவைத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று (புதன்கிழமை) கடுமையாக தாக்கி உள்ளார். இந்தியாவுக்கு எதிராக இஸ்ரேலிய பெகாசஸ் உளவு சாப்ட்வேர் பயன்படுத்தி, பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் (Amit Shah) "நாட்டின் ஜனநாயகத்தின் ஆன்மாவைத் தாக்கியுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்கள் முன்னிலையில் ராகுல் காந்தி (Congress MP Rahul Gandhi) பேசும் போது, "பெகாசஸ் எனும் ஆயுதத்தை என்னை உட்பட எதிர்க்கட்சி தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், விஞ்ஞானிகள், தொழில் அதிபர்கள், சமூக செயற்பட்டாளர்கள் என பலரது செல்போன்களுக்கும் அனுப்பப்பட்டு உளவு பார்க்கப்பட்டுள்ளது என மத்திய அரசை சாடினார்.
பிரதமர் நரேந்திர கூறுவது போல, எதிர்க்கட்சியால் பாராளுமன்றம் கூட்டத்தொடர் பாதிக்கப்படவில்லை, நாங்கள் பாராளுமன்றம் அமர்வு நடைபெறுவதை இடையூறு செய்யவில்லை, நாங்கள் எங்கள் கடமையை மட்டுமே செய்கிறோம்" என்று மத்திய அரசின் குற்றச்சாட்டுகளை குறித்து ராகுல் காந்தி கூறினார்.
ALSO READ | Pegasus: உளவு பார்த்ததாக கூறவில்லை என அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அடித்த பல்டி
மேலும் பேசிய அவர், எங்களை பொறுத்த வரை பெகாசஸ் விவகாரம் என்பது தேசத்துரோகம். இது தனியுரிமைக்கான விஷயம் அல்ல. இது தேசவிரோத செயல் எனக் கூறினார்.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் குரல் ஒடுக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். நாங்கள் ஒரே ஒரு கேள்வியை தான் மத்திய அரசிடம் கேட்கிறோம். பெகாசஸ் உளவு சாப்ட்வேர் வாங்கினீர்களா? இல்லையா? சொந்த மக்களுக்கு எதிராக பெகாசஸ் ஆயுதத்தை பயன்படுத்தப்பட்டதா? என்பதை மட்டும் நாங்கள் கேட்கிறோம். ஆனால் அதற்கு ஆம் அல்லது இல்லை என மத்திய அரசு பதில் சொல்ல மறுக்கிறது எனவும் ராகுல் காந்தி கூறினார்.
ALSO READ | வாட்ஸ் அப் மூலம் உளவு எவ்வாறு செய்யப்பட்டது? காரணம் என்ன? என்பதை அறிக
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR