வாட்ஸ் அப் மூலம் உளவு எவ்வாறு செய்யப்பட்டது? காரணம் என்ன? என்பதை அறிக

வாட்ஸ்அப்பை உளவு பார்த்த "பெகாசஸ்" அது இந்தியாவை எவ்வாறு அடைந்தது? யார் அதை வாங்கியது? தெரிந்துக்கொள்வோம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 4, 2019, 09:15 PM IST
வாட்ஸ் அப் மூலம் உளவு எவ்வாறு செய்யப்பட்டது? காரணம் என்ன? என்பதை அறிக title=

புதுடெல்லி: ஸ்பைவேர் (spyware - Pegasus) மூலம் வாட்ஸ்அப்பை உளவு பார்த்த "பெகாசஸ்" உலகம் முழுவதையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், உளவு பார்த்தவர்களில் இந்திய குடிமக்களும் அடங்குவர். இந்த குடிமக்களான அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், சமூக சேவையாளர்கள், பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள் போன்றவர்கள் அடங்குவார்கள். தற்போது காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் வாட்ஸ்அப் வரை வேவுபார்த்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பெகாசஸ் நிறுவனம் இந்த ஸ்பைவேரை மத்திய அரசாங்கத்துக்கு விற்கிறது என்று எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளனர். அதாவது பாஜக தலைமையிலான மத்திய அரசு தான்  பெகாஸஸ் உதவியுடன் செய்திருக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. தற்போது கேள்வி என்னவென்றால், அது இந்தியாவை எவ்வாறு அடைந்தது? யார் அதை வாங்கியது? என்பது தான்.

மக்களை உளவு பார்க்க என்எஸ்ஓ (NSO Group) குழுமத்தால் உருவாக்கப்பட்ட சிறப்பு வகை ஸ்பைவேர் மென்பொருளின் பெயர் தான் பெகாசஸ். உங்கள் ஸ்மார்ட் போனில் பல வழிகளில் நுழையக்கூடிய ஸ்பைவேர் தான் பெகாசஸ். இந்த ஸ்பைவேரின் விலை 180 முதல் 200 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்பைவேர் என்ற பெகாசஸ் மூலம் இந்திய பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குறித்து வாட்ஸ்அப்பில் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பெகாசஸ் உருவாக்கிய என்எஸ்ஓ குழுமத்திற்கு எதிராக இந்த ஆண்டு மே மாதம் கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் வழக்குத் தொடர்ந்த போது தான், இந்த விவகாரம் வெளியே தெரியவந்துள்ளது. இதன் பிறகு தான் வாட்ஸ்அப் மே 13 அன்று உடனடியாக செயலியை புதுப்பிக்கமாறு அறிவுறுத்தியது.

வாட்ஸ்அப் மூலம் எவ்வாறு நீங்கள் உளவு பார்க்கப்பட்டீர்கள் என்பதை இப்போது நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இது போன்ற ஒரு ஆயுதத்திற்கு இரையாகாமல் உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் இது முக்கியம். வாட்ஸ்அப் மூலம் உளவு பார்க்க, என்எஸ்ஓ ஒரு ஸ்பைவேரை உருவாக்கியது. இந்த ஸ்பைவேர் உதவியுடன், வாட்ஸ்அப் பயனர்களின் மொபைல் போன்கள் ஹேக் செய்யப்பட்டன. இதற்காக, வாட்ஸ்அப் பயனருக்கு வீடியோ அழைப்பு வந்தது. இந்த அழைப்புகள் பெரும்பாலும் வடக்கு ஐரோப்பாவின் நாடுகளிலிருந்து வந்தன.

மொபைல் ஃபோன்களில் இந்த அழைப்புகளைப் வந்த பிறகு, ஒரு வகையான ஆபத்தான மென்பொருள் ஃபோனில் உள்ள மைக், கேமராக்குள் நுழைந்து மக்களின் தரவை எடுக்கப் பயன்படுத்தப்பட்டது. இந்த வகை ஸ்பைவேர்கள், உங்களுக்கு அழைப்பு வந்தும், நீங்கள் எடுக்கவில்லை என்றாலும் நன்றாக வே.வேலை செய்யும். அதாவது, உங்கள் மொபைல் தொலைபேசியில் வீடியோ அழைப்பு வரவில்லை அல்லது அதன் அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தால், உங்கள் தொலைபேசியில் ஆபத்தான மென்பொருள் நுழைந்துவிடும் என்பதே வேதனை.

அப்படி மொபைல் ஃபோனில் நுழைந்தவுடன் கேமரா, மைக்ரோஃபோன், கேலரி, சேமிப்பு மற்றும் இருப்பிடம் போன்ற முக்கியமான அம்சங்களைக் கட்டுப்படுத்தி, உங்களை குறித்து உளவு பார்க்கும்.

Trending News