விவசாயிகள் போராட்டம் மக்களுக்கு பெரும் இடைஞ்சல்.. உச்சநீதிமன்றத்தில் வழக்கு..!!
பொது மக்களுக்கு பெரும் இடைஞ்சலை ஏற்படுத்தும் வகையில், தில்லி எல்லையில் போராட்டம் செய்பவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி: புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியின் எல்லைப் பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை உடனடியாக அகற்றுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்த கோரி உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது, சாலை முற்றுகை மற்றும் கூட்டங்கள் காரணமாக பயணிகள் கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர் என்பதோடு, COVID-19 தொற்று பாதிப்புகளும் அதிகரிக்க இது வழிவகுக்கும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
டெல்லி எல்லைகளில் சாலைகளைத் திறக்கவும், ஆர்ப்பாட்டக்காரர்களை, போரட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்திற்கு மாற்றவும், COVID-19 தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த போராட்டம் நடக்கும் இடத்தில் சமூக இடைவெளி மற்றும் மாஸ்குகளை பயன்படுத்துவது குறித்த வழிகாட்டுதல்களை வழங்கவும், உச்ச நீதிமன்றம் உத்தரவுகளை வழங்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
சட்ட மாணவர் ரிஷாப் சர்மா தாக்கல் செய்த மனுவில், "தில்லி (Delhi) எல்லைகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டத்தின் காரணமாக, வாகன போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து நெரிசல் காரணமாக, மருத்துவ சிகிச்சைக்காக செல்பவர்கள் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் தவிக்கின்றர். இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது, ”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை (CAA)எதிர்த்து ஆர்ப்பாட்டக்காரர்கள் இங்குள்ள ஷாஹீன் பாக் பகுதியில் சாலை முற்றுகையிடுவதற்கு எதிரான மனுவில் வழங்கப்பட்ட அக்டோபர் 7 தீர்ப்பு மனுவில் குறிப்பிட்டுள்ளது. அந்த தீர்ப்பில், பொது இடங்களை காலவரையின்றி ஆக்கிரமிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியதோடு, ஆர்ப்பாட்டங்கள் நியமிக்கப்பட்ட இடங்களில் மட்டும் நடத்தப்பட வேண்டும் என கோரியது.
ALSO READ | உ.பி முதல்வர் யோகி-நடிகர் அக்ஷய் குமார் இடையில் நடந்த முக்கிய ஆலோசனை என்ன..!!!
அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட COVID-19 வழிகாட்டுதல்களைப் பற்றி குறிப்பிடுகையில், தொற்றுநோய்களுக்கு மத்தியில் பெரிய கூட்டங்களை நடத்த வேண்டாம் என்று வழிகாட்டுதல்கள் இருந்தபோதிலும், லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளில் கூயுள்ளது, கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையை அதிகரிக்க வழிவகுக்கும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்று நோயின் சமூக பரவலைத் தடுப்பதைக் கருத்தில் கொண்டு, போராட்டக்காரர்களை அகற்றுவது மிகவும் அவசியம் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
தில்லி எல்லைகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டத்தால் சாலைகளில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் காரணமாக, டெல்லியை ஹரியானா (Haryana) மற்றும் உத்தரபிரதேசத்துடன் இணைக்கும் முக்கிய வழிகளை போலீசார் மூடியதால், தேசிய தலைநகரின் பல எல்லைகளில் போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக காணப்படுகிறது.
ALSO READ | COVID-19 நிலை குறித்து பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR