COVID-19 நிலை குறித்து பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம்

COVID-19 தடுப்பு மருந்து கிடைப்பது குறித்தும், அதன் விநியோகத்திற்கான திட்டங்கள் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 4, 2020, 02:36 PM IST
  • பிரதமர் நரேந்திர மோடி அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு தலைமை தாங்குகிறார்.
  • COVID-19 நிலை குறித்து ஆலோசனை.
  • தடுப்பு மருந்து வழித்தடம் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.
COVID-19 நிலை குறித்து பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் title=

புது தில்லி: நாட்டின் COVID-19 தொற்று நிலைமை குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு அரசியல் அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் உயர் மத்திய அமைச்சர்களுடன் அனைத்து கட்சி கூட்டத்திற்கு வெள்ளிக்கிழமை தலைமை வகித்துக்கொண்டுள்ளார்.

காலை 10:30 மணியளவில் தொடங்கிய மெய்நிகர் கூட்டத்தில் கலந்து கொள்ள மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்ள அனைத்து கட்சிகளிலிருந்தும் தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட எம்.பி.க்களைக் கொண்ட முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சுமார் 12 தலைவர்கள் கூட்டத்தில் பேசவுள்ளனர் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் (Gulam Nabi Azad) கலந்துகொள்கிறார். TMC-ஐச் சேர்ந்த சுதீப் பாண்டியோபாத்யாய், என்.சி.பி.யின் ஷரத் பவார், டி.ஆர்.எஸ்ஸைச் சேர்ந்த நாமா நாகேஸ்வர ராவ், சிவசேனாவைச் சேர்ந்த விநாயக் ரவுத் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொள்கின்றனர்.

COVID-19 தடுப்பு மருந்து கிடைப்பது குறித்தும், அதன் விநியோகத்திற்கான திட்டங்கள் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொற்றுநோய் (Pandemic) பரவல் துவங்கியதிலிருந்து COVID-19 நிலைமை குறித்து விவாதிக்க அரசாங்கத்தால் அழைக்கப்பட்ட இரண்டாவது அனைத்து கட்சி கூட்டம் இதுவாகும்.

ALSO READ: Coronavirus Vaccine குறித்து அரசு செய்த மிகப்பெரிய அறிவிப்பு என்ன தெரியுமா

கூட்டத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அவர்களைத் தவிர, நாடாளுமன்ற விவகார அமைச்சர்கள் பிரல்ஹாத் ஜோஷி மற்றும் அதே அமைச்சின் மாநில அமைச்சர்கள் அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் வி.முரளீதரன் ஆகியோரும் இதில் உள்ளனர்.

மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷனின் உரையோடு கூட்டம் தொடங்க வாய்ப்புள்ளது. தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் (India) போராட்டம் குறித்த விளக்கப்படமும் காட்டப்படும்.

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து (Coronavirus Vaccine) மேம்பாட்டுப் பணிகளை மறுஆய்வு செய்வதற்காக அகமதாபாத், ஹைதராபாத் மற்றும் புனே ஆகிய இடங்களில் உள்ள மருந்து நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி சென்றுவந்த பிறகு இந்த கூட்டம் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ: 10 பேரில் 7 பேர் தொடர்ந்து முகமூடி அணிந்தால் கொரோனாவை நிறுத்தலாம்: ஆய்வு

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News