Petrol Price 31 May 2021 Update: மே மாதத்தில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை 15 முறை அதிகரித்துள்ளது. அதாவது மாதத்தில் பாதி நாட்களுக்கு விலையில் அதிகரிப்பு இருந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 25 காசுகள் அதிகரித்து 95.76 ரூபாய் என்ற அளவில் விற்கப்படுகின்றது. டீசல் விலை 25 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு 89.90 ரூபாய்க்கு விற்பனையாகிறது.


மும்பை உட்பட மகாராஷ்டிராவின் பல நகரங்களில் இப்போது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு (Petrol) ரூ .100 க்கு மேல் செலவிட வேண்டியுள்ளது. கச்சா எண்ணெய் இப்போது சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய்க்கு 70 டாலருக்கு அருகில் வர்த்தகம் செய்யப்படுகிறது, எனவே வரும் நாட்களில் விலை குறையும் என்ற நம்பிக்கையும் குறைவாகவே  உள்ளது. 


மே மாதத்தில் விலைகள் 15 முறை உயர்ந்தன


மே 4 முதல், தொடர்ந்து 4 நாட்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் (Diesel) விலை அதிகரிக்கப்பட்டது. தேர்தல் காரணமாக அதற்கு முந்தைய 18 நாட்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. பெட்ரோல் மற்றும் டீசல் மே மாதத்தில் இதுவரை 15 நாட்கள் உயர்ந்துள்ளது. மே மாதத்தில் டெல்லியில் பெட்ரோல் விலை ரூ .3.83 அதிகரித்துள்ளது, டீசல் விலை இந்த மாதத்தில் ரூ .4.42 அதிகரித்துள்ளது.


நான்கு முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம்


நகரம் நேற்றைய விலை இன்றைய விலை
டெல்லி 93.94 94.23
சென்னை 95.51 95.76
மும்பை 100.19 100.47
கொல்கத்தா 93.97 94.25

ஏப்ரல், மார்ச் மாதத்தில் பெட்ரோல்-டீசல் விலை மலிவானது


ஏப்ரல் 15 அன்று பொது மக்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் சிறிது நிவாரணம் கிடைத்தது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏப்ரல் மற்றும் மார்ச் மாதத்தில் மூன்று முறை குறைக்கப்பட்டது. ஏப்ரல் 15 க்கு முன்னர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் 2021 மார்ச் 30 அன்று மாற்றம் இருந்தது. 


ALSO READ: மின்சார வாகங்களுக்கான மிகப் பெரிய செய்தி: ஊக்கமளிக்கும் உத்வேகத்தில் மத்திய அரசு


அப்போது டெல்லியில் (Delhi) பெட்ரோல் 22 பைசாவும் டீசல் 23 பைசாவும் குறைக்கப்பட்டது. மார்ச் மாதத்தில் பெட்ரோல் 61 பைசாவும், டீசல் விலை 60 பைசாவும் குறைக்கப்பட்டது. மார்ச் மாதத்தில் பெட்ரோல் டீசல் விலை 3 முறை குறைக்கப்பட்டதற்கு மிகப்பெரிய காரணம் உலக சந்தையில் கச்சா எண்ணெயில் ஏற்பட்ட பலவீனமாகும்.


பெட்ரோல் 1 ஆண்டில் ரூ .23 விலை உயர்ந்தது


இன்றைய விலையை ஒரு வருடத்திற்கு முன்பு இருந்த விலைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், 2020 மே 31 அன்று டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ .71.26 ஆக இருந்தது. அதாவது ஒரு ஆண்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ .2.97 அதிகரித்துள்ளது. 31 மே 2020 அன்று டீசல் லிட்டருக்கு ரூ .69.39 ஆக இருந்தது. அதாவது டீசல் ஒரு வருடத்தில் லிட்டருக்கு ரூ .15.76 விலை உயர்ந்துள்ளது.


ALSO READ: Petrol diesel price today: சில இடங்களில் சதமடித்தது பெட்ரோல் விலை, உங்கள் ஊரில் என்ன விலை?
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR