மின்சார வாகங்களுக்கான மிகப் பெரிய செய்தி: ஊக்கமளிக்கும் உத்வேகத்தில் மத்திய அரசு

கொரோனா நெருக்கடி காரணமாக பின்தங்கிப்போன மேக் இன் இந்தியா மற்றும் தற்சார்பு இந்தியா திட்டங்களை மீண்டும் புதுப்பிக்க ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன.   

Written by - ZEE Bureau | Last Updated : May 12, 2021, 06:44 PM IST
  • மேக் இன் இந்தியா மற்றும் தற்சார்பு இந்தியா திட்டங்களை மீண்டும் புதுப்பிக்க ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன.
  • நாட்டில் மின்சார வாகனங்களை அதிகரிப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.
  • நாட்டில் மின்சார வாகன உற்பத்தி மற்றும் வியாபாரத்திற்கு அதிக ஊக்கம் அளிக்கப்படும்.
மின்சார வாகங்களுக்கான மிகப் பெரிய செய்தி: ஊக்கமளிக்கும் உத்வேகத்தில் மத்திய அரசு

புதுடெல்லி: கொரோனா நெருக்கடி காரணமாக பின்தங்கிப்போன மேக் இன் இந்தியா மற்றும் தற்சார்பு இந்தியா திட்டங்களை மீண்டும் புதுப்பிக்க ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன. நாட்டில் மின்சார வாகனங்களை அதிகரிப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.

பேட்டரி சேமிப்பை அதிகரிக்க புதிய உற்பத்தி இணைப்பு ஊக்க செயலாக்கத்தின் கீழ், இறக்குமதியை குறைக்க அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு பதிலாக இந்தியாவிலேயே இவை உருவாக்கப்படும். இது நாட்டில் மின்சார வாகன (Electric Vehicles) உற்பத்தி மற்றும் வியாபாரத்திற்கு அதிக ஊக்கத்தை அளிக்கும்.

பேட்டரி சேமிப்புக்கு ஊக்கம் கிடைக்கும்

டெல்லியில் புதன்கிழமை இது தொடர்பான அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. சூரிய மின் நிலையத்திலிருந்து ஒரு லட்சம் 36 ஆயிரம் ஜிகாவாட் மின்சாரம் நாட்டில் உற்பத்தியாகிறது. எனினும், இந்த மின்சாரத்தை சேமிக்க முடிவதில்லை. இந்த சூழ்நிலையில், பேட்டரி சேமிப்பால் இவை அனைத்தும் சாத்தியமாகும். மின்சார வாகனம் வாங்கும் எவரும் பெட்ரோல் வாங்க தேவை இருக்காது என அரசு கூறியது.

16000 கோடி ஊக்கத்தொகை கிடைக்கும் 

கப்பல்துறை, தொழில், டீசல் ஜெனரேட்டர்கள் போன்றவற்றில் இதற்கான மகத்தான சாத்தியங்கள் இருப்பதாக அரசாங்கம் (Government) கூறியது. பேட்டரி சேமிப்பு வாழ்க்கையின் அனைத்து பகுதிகளையும் பாதிக்கிறது. நாட்டில் அதன் உற்பத்தியை அதிகரிக்க, அதில் ரூ .45000 கோடி முதலீடு செய்யப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இதில் முதலீடு செய்பவர்களுக்கு ரூ .16000 கோடி ஊக்கத்தொகை கிடைக்கும்.

ALSO READ: தினமும் 1000 ரயில்வே ஊழியர்கள் கொரோனாவால் பாதிப்பு, 1,952 பேர் பலி: இந்திய ரயில்வே

தடுப்பூசி குறித்த வழக்கமான தகவல்களைப் பெறுவீர்கள்

நாட்டில் கொரோனா தடுப்பூசியின் (Vaccination) தட்டுப்பாடு பற்றி ஏற்படும் விவாதங்கள் குறித்து, ஒரு நாள் கழித்து, ஒரு விரிவான பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி தடுப்பூசி நிலைமை குறித்து நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தப்போவதாக அரசு தரப்பில்  கூறப்பட்டது. இதனுடன் பொதுமக்கள் மனதில் இது தொடர்பாக எழும் கேள்விகளுக்கான பதில்களை அளிக்கவும் முயற்சி செய்யப்படும் என அரசு தெரிவித்துள்ளது. 

அரசின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், கொரோனா வைரஸ் போன்ற தொற்று ஒரு நூற்றாண்டில் ஒரு முறை வரும் பெரிய நெருக்கடி என்றார். இதுபோன்ற நெருக்கடி வரும்போதெல்லாம், நாடு முழுவதும் ஒன்றுபட்டு அதற்கு எதிராக செயல்படுகிறது என்று செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார். இந்த முறையும், நாடு ஒன்றுபட்டு இந்த நெருக்கடியிலிருந்து வெளியே வரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ALSO READ: G7 உச்சி மாநாட்டிற்கான பிரதமர் மோடியின் பிரிட்டன் பயணம் ரத்து: MEA

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News