புதுடில்லி: பெட்ரோல் மற்றும் டீசல் (Diesel) விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. கடந்த ஒன்பது நாட்களில் பெட்ரோல் விலை மாற்றப்படவில்லை என்றாலும், டீசல் விலை செவ்வாய்க்கிழமை உயர்த்தப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெரிய நகரங்களைப் (Major cities) பொறுத்தவரை, டெல்லியில், டீசல் இப்போது லிட்டருக்கு 80.78 ரூபாவாகவும், பெட்ரோல் லிட்டருக்கு 80.43 ரூபாயாகவும் உள்ளது. கொல்கத்தாவில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 82.10 ரூபாவாகவும், டீசல் விலை 75.89 ரூபாவாகவும் உள்ளது. மும்பையில், பெட்ரோல் லிட்டருக்கு 87.19 ரூபாயிலும்  டீசல் 79.05 ரூபாயிலும் கிடைக்கிறது.  சென்னையில் பெட்ரோல் (Petrol) விலை லிட்டருக்கு 83.63 ரூபாயாகவும் டீசல் 77.91 ரூபாயாகவும் உள்ளது.


தேசிய தலைநகரில் பெட்ரோலை விட டீசலின் விலை (prices) அதிகமாக உள்ளது. முதல் முறையாக டீசல் விலை ஜூன் 24 அன்று தேசிய தலைநகரில் பெட்ரோல் விலையைத் தாண்டி 79.76 ரூபாயை எட்டியது.


மட்திப்புக் கூட்டு வரியான (VAT)-ன் மாற்றங்களைப் பொறுத்து விகிதங்கள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றன. இருப்பினும், தேசிய தலைநகரில் மட்டுமே டீசலின் விலை பெட்ரோலை விட அதிகமாக உள்ளது. இங்கு மாநில அரசாங்கம் உள்ளூர் விற்பனை வரி அல்லது எரிபொருளின் மீதான VAT ஐ மே மாதத்தில் கடுமையாக உயர்த்தியது.


பாரம்பரியமாக, குறைந்த வரிவிதிப்பு காரணமாக டீசலின் விலை பெட்ரோலை விட லிட்டருக்கு 18-20 ரூபாய் குறைவாக இருந்தது. எனினும், சில ஆண்டுகளாக, வரி அதிகரித்துள்ளதால், இந்த இடைவெளி குறைந்துள்ளது.


ALSO READ: கிடு கிடுவென உயரும் தங்கத்தின் விலை... 22 கேரட் சவரனுக்கு ₹.416 உயர்வு..!


சில்லறை விற்பனை விலையில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு வரிகளாகும். பெட்ரோல் விலையில் லிட்டருக்கு சுமார் 50.69 ரூபாய் அதாவது 64 சதவீதம் வரிகளின் பங்குள்ளது. 32.98 ரூபாய் மத்திய கலால் வரி மற்றும் 17.77 ரூபாய் உள்ளூர் விற்பனை வரி அல்லது வாட் ஆகும்.


டீசலின் சில்லறை விற்பனை விலையில் 63 சதவீதத்திற்கும் அதிகமான அளவு வரிகளின் பங்கு உள்ளது. லிட்டருக்கு 49.43 ரூபாய் என்ற மொத்த வரியில், 31.83 ரூபாய்  மத்திய கலால் வரியாகவும் 17.60 (VAT) ஆகவும் உள்ளது.