பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனவும் கடந்த சில தினங்களாக செய்திகள் பரவி வருகின்றன. எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் (OMCs) பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைப்பதாக செய்திகள் வெளியான நிலையில், இது குறித்து மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பதில் அளித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலையாக இருந்தால், எண்ணெய் நிறுவனங்களின் அடுத்த காலாண்டு நிதி நிலை சிறப்பாக இருந்தால், எண்ணெய் நிறுவனங்கள் இந்த விஷயத்தை கவனிக்கும் நிலையில் இருக்கும் என்று அமைச்சர் கூறினார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தான் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிட முடியாது என்றார். எண்ணெய் நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்பட்ட சில இழப்புகளை ஈடுகட்டியுள்ள நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் சிறந்த கர்ப்பரேட் சிட்டிசன்கள் என்பதால், அடுத்து என்ன செய்ய போகிறார்கள் என்று பார்ப்போம்" என்று கூறினார்.


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் 2022 ஏப்ரல் முதல் எண்ணெய் விலை அதிகரிக்காமல் இருப்பதை உறுதி செய்துள்ளதாகவும், நுகர்வோர் எந்த சிரமத்தையும் சந்திக்காமல் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்யும் என்றும் பூரி கூறினார். நிறுவனங்கள் தங்களின் நஷ்டத்தை ஏறக்குறைய மீட்டு இயல்பு நிலைக்கு வந்துவிட்டதாக முன்னதாக செய்திகள் வெளியாகின. இதன் விளைவாக, நிறுவனங்கள் இனி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் 10, 2023 அன்று, டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.96.72 ஆகவும், ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.89.62 ஆகவும் உள்ளது.


முன்னதாக, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு கடந்த ஆண்டு மே மாதம் அதிரடியாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. பெட்ரோல் மீதான கலால் வரியை 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 6 ரூபாயும் மத்திய அரசு குறைத்துள்ளது. இதன் மூலம் டீசல் விலை லிட்டருக்கு ரூ.7 குறைக்கப்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 50 காசு குறைக்கப்பட்டது. அதன்பின் 1 வருடத்திற்கு மேலாகியும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.


மேலும் படிக்க | ஜாக்பாட் திட்டம்... மலிவு விலையில் மருந்துகள் - கூடவே வேலைவாய்ப்பும்!


இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் விலையை தினம் தோறும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வந்தன. 


FY24 இல் ஜூலை - செப்டம்பர் அல்லது அக்டோபர் - டிசம்பர் காலாண்டில்பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பை சாமானியர்கள் எதிர்பார்க்கலாம் என்கின்றனர் நிபுணர்கள். ஏனெனில் சர்வதேச கச்சா எண்ணெய் விலை குறைவதால், FY23 இல் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்வதில் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு (OMCs) உதவுகிறது.


மேலும் படிக்க | Post Office Scheme: வெறும் ரூ.10,000 டெபாசிட் செய்து, ரூ.16 லட்சத்தை இந்தத் திட்டத்தில் பெறுங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ