சீரடி விமான நிலையத்தில் ஓடுதளத்தில் இருந்து விமானம் விலகி ஓடிய விவகாரத்தில் விமானிகள் இருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீரடி விமான நிலையத்தில் நேற்று ஓடுதளத்திலிருந்து ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று விலகி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக தற்போது அந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தை இயக்கிய விமானிகள் இருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


மஹாராஷ்டிரா மாநிலம் சீரடி விமான நிலையம் கக்காடி என்னும் கிராமப் பகுதியின் அருகே அமைந்துள்ளது. நேற்று மாலை 4.30 மணி அளவில் ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று ஓடுதளத்தில் தரையிறங்க வேண்டிய புள்ளியிலிருந்து 30- 40 மீட்டர் தள்ளிச்சென்று தரையிறங்கியது.


எனினும் இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணித்த பயணிகளுக்கோ ஊழியர்களுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அனைவரும் பாதுகாப்பாகவே தரையிறக்கப்பட்டனர் என விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்து விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டி விமானத்தை இயக்கிய விமானிகள் இருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


இந்த விமானம் போயிங் ரக விமானம் என்பது கூடுதல் பயத்தை ஏற்படுத்தியதாகவே தெரிகிறது. விமானத்தின் பயணிகள் மற்றும் பயண விவரங்கள் எதையும் ஸ்பைஸ்ஜெட் வெளியிடவில்லை.


இவ்விவகாரம் குறித்து விமான விபத்து விசாரணைப் பிரிவு அதிகாரிகளும் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். பயணிகள் மீட்கப்படுவதற்கு முன்னர் சுமார் 2.30 மணி நேரம் விமானத்தினுள் தவித்ததாகக் கூறப்படுகிறது.