குழந்தைகளுக்கான PM CARES திட்டம்: மாதம் ரூ.4000, இலவச கல்வியுடன் 23வது வயதில் ரூ.10 லட்சம்
PM Cares for Children: குழந்தைகளுக்கான பி.எம். கேர்ஸ் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் பிற நிதி உதவிகளை பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்.
கொரோனா தொற்று காரணமாக, பெற்றோர்கள் இருவரையோ அல்லது ஏற்கனவே பெற்றோரில் ஒருவரை இழந்த நிலையில், மற்றொடுவரையும் இழந்திருந்திருந்தாலோ, சட்டரீதியான பாதுகாவலரையோ, தத்தெடுத்த பெற்றோர்களையோ, அல்லது தத்தெடுத்த ஒற்றை பெற்றோரையோ இழந்த குழந்தைகளுக்கு ஆதரவளிப்பதற்காக குழந்தைகளுக்கான பி.எம். கேர்ஸ் திட்டம் (PM Cares for Children), 2021 மே 29ம் தேதி அன்று பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது.
குழந்தைகளுக்கான பி.எம். கேர்ஸ் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் பிற நிதி உதவிகளை பிரதமர் மோடி இன்று வழங்குகிறார். திட்டத்தை தொடக்கி வைத்த பிரதமர், பாரத அன்னை உங்களுடன் இருக்கிறாள் எனக் கூறினார்
இது குறித்து ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவிலும் தகவல் தெரிவித்துள்ளார். தந்து பதிவில், மே 30 அன்று காலை 10.30 மணிக்கு, குழந்தைகளுக்கான PM CARES திட்டத்தின் கீழ், ஆயுஷ்மான் பாரத்-பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனாவின் கீழ் குழந்தைகளுக்கு பாஸ்புக் மற்றும் சுகாதார அட்டை வழங்கப்படும்.
திட்ட விபரம்
கொரோனா காலத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. 29 மே 2021 அன்று, பிரதமர் நரேந்திர மோடி, குழந்தைகளுக்கான பிரதமர் கேர்ஸ் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் மருத்துவக் காப்பீடு வசதி வழங்கப்பட உள்ளது. குழந்தைகளின் பதிவுக்காக pmcaresforchildren.in என்ற போர்டலும் தொடங்கப்பட்டது.
மேலும் படிக்க | ரூ.2000 நோட்டுக்கள் புழக்கம் வெகுவாக குறைந்தது ஏன்... RBI கூறிய முக்கிய தகவல்
மகாராஷ்டிராவில் இருந்து பெரும்பாலான விண்ணப்பங்கள்
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் இருந்து 1,158 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அதன் பிறகு உத்தரபிரதேசத்தில் இருந்து 768 விண்ணப்பங்களும், மத்திய பிரதேசத்தில் இருந்து 739 விண்ணப்பங்களும், தமிழகத்தில் இருந்து 496 விண்ணப்பங்களும், ஆந்திராவில் இருந்து 479 விண்ணப்பங்களும் பெறப்பட்டன என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி பகிர்ந்துள்ள தரவுகள் கூறுகின்றன.
திட்டத்தின் நன்மைகள் என்ன
1. கொரோனாவால் பெற்றோரை இழக்கும் குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதாந்திர உதவித்தொகையாக ரூ.4000 அரசு வழங்கும்.
2. இதன் கீழ், குழந்தைகளுக்கு 23 வயதாகும் போது, PM Cares நிதியில் இருந்து மொத்தமாக ரூ.10 லட்சம் வழங்கப்படும்.
3. இந்தக் குழந்தைகளுக்கு மத்திய அரசு இலவசக் கல்வி வழங்கும்.
4. இதன் கீழ், குழந்தைகள் உயர்கல்விக்கான கடனைப் பெறலாம். அதற்கான வட்டி பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து வழங்கப்படும்.
5. இந்த குழந்தைகளுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 18 ஆண்டுகளுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு கிடைக்கும்.
6. பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து காப்பீட்டு பிரீமியம் செலுத்தப்படும்.
7. பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் அருகில் உள்ள மத்திய அரசின் பள்ளி அல்லது தனியார் பள்ளியில் சேர்க்கப்படுவார்கள்.
8. சைனிக் பள்ளி மற்றும் நவோதயா வித்யாலயா போன்ற மத்திய அரசின் எந்தவொரு போர்டிங் பள்ளியிலும் 11 முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள்.
9. குழந்தை தனது பாதுகாவலருடன் அல்லது வேறு யாரேனும் குடும்ப உறுப்பினருடன் வசித்து வந்தால், அவர் அருகிலுள்ள கேந்திரிய வித்யாலயா அல்லது தனியார் பள்ளியிலும் சேர்க்கை பெறுவார்.
10. குழந்தை தனியார் பள்ளியில் சேர்க்கப்பட்டால், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், அவரது கட்டணம் PM Cares நிதியில் இருந்து வழங்கப்படும் மற்றும் அவரது பள்ளி சீருடை, புத்தகங்கள் மற்றும் நகல்களுக்கான செலவுகளும் செலுத்தப்படும்.
மேலும் படிக்க | PF தொகையை மாற்றணுமா: வீட்டில் இருந்தபடியே செய்யலாம், எளிய செயல்முறை இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR