PMKSNY: பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என இந்த வகையில் பார்க்கலாம்!!
கொரோனா நெருக்கடி காலத்தில் 2000 ரூபாய் தவணையை விவசாயிகளின் கணக்கிற்கு அரசாங்கம் மாற்றியது. இந்தத் திட்டத்தின் கீழ், அரசாங்கம் ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்குகிறது.
நாட்டில் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தை (PMKSNY) மத்திய அரசு துவக்கியது. கொரோனா நெருக்கடி காலத்தில் 2000 ரூபாய் தவணையை விவசாயிகளின் (Farmers) கணக்கிற்கு அரசாங்கம் மாற்றியது. இந்தத் திட்டத்தின் கீழ், அரசாங்கம் ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்குகிறது. நீங்களும் இதற்கு தகுதியுடையவர்களாக இருந்து, இந்தத் தொகை இன்னும் உங்கள் கணக்கில் மாற்றப்படவில்லை என்றால், நீங்கள் உடனடியாக திட்டத்தின் பயனாளிகள் பட்டியலில் (Beneficiary List) உங்கள் பெயர் உள்ளதா என்பதை சரிபார்க்கவும்.
இந்த பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை எப்படி பார்ப்பது என்பதை பார்க்கலாம்.
இந்த வகையில் பட்டியலில் செக் செய்யவும்:
முதலில் pmkisan.gov.in என்ற வலைத்தளத்திற்குச் செல்லவும். இங்கே முகப்பு பக்கத்தில் உள்ள மெனு பாரில், ‘Farmer corner’-க்கு செல்லவும். இதற்குப் பிறகு, இங்கே 'பயனாளி பட்டியல்' இணைப்பைக் கிளிக் செய்யவும். இப்போது உங்கள் மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம், தொகுதி மற்றும் கிராம விவரங்களை உள்ளிடவும். இதை நிரப்பிய பிறகு, Get Report என்பதைக் கிளிக் செய்து முழுமையான பட்டியலைப் பெறுங்கள்.
உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள்
விவசாயிகள் முதலில் pmkisan.gov.in இணையதளத்தில் லாக்-இன் செய்ய வேண்டும். அதில் கொடுக்கப்பட்டுள்ள ‘Farmer corner’ tab-ல் கிளிக் செய்ய வேண்டும். இந்த tab-ல், விவசாயிகள் தங்களை பிரதமர் கிசான் யோஜனாவில் பதிவு செய்வதற்கான ஆப்ஷன் அளிக்கப்பட்டுள்ளது. இங்கே நீங்கள் உங்கள் பெயரை பதிவு செய்யலாம்.
இந்த பட்டியலை அரசு பதிவேற்றியுள்ளது
இதுவரை, இந்த திட்டத்தின் பயன் வழங்கப்பட்ட விவசாயிகளின் பெயர்களையும் மாநில / மாவட்ட வாரியாக / தெஹ்ஸில் / கிராமத்தின் படி காணலாம். அனைத்து பயனாளிகளின் முழு பட்டியலும் அரசாங்கத்தால் பதிவேற்றப்படுகிறது. அது மட்டுமல்லாமல், உங்கள் விண்ணப்பத்தின் நிலை என்ன என்பதை, விவசாயிகள் ஆதார் எண் / கணக்கு எண் மற்றும் மொபைல் எண் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்.
ALSO READ: PM Kisan Scheme: 2 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் வரவில்லையா? இந்த எண்ணை அழைக்கவும்!!
உங்கள் பெயரை pmkisan.gov.in இல் ஆன்லைனில் சரிபார்க்கவும்
இந்தத் திட்டத்தைப் பயன்படுத்த நீங்கள் விண்ணப்பித்திருந்தால், உங்கள் பெயரை பயனாளிகள் பட்டியலில் (Beneficiary List) காண விரும்பினால், உங்களுக்காக, அரசாங்கம் இப்போது ஆன்லைனிலும் இந்த வசதியை வழங்கியுள்ளது. பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டம் 2020 இன் புதிய பட்டியலை அதிகாரப்பூர்வ வலைத்தளமான pmkisan.gov.in இல் பார்க்கலாம்.
விவசாயிகளுக்கு இதுவரை கிடைத்துள்ள தவணை
1- PM கிசான் யோஜனாவின் முதல் தவணை - பிப்ரவரி 2019 இல் வெளியிடப்பட்டது
2- PM கிசான் யோஜனாவின் இரண்டாவது தவணை – 2 ஏப்ரல் 2019 இல் வெளியிடப்பட்டது
3- PM கிசான் யோஜனாவின் மூன்றாவது தவணை – ஆகஸ்டில் வெளியிடப்பட்டது
4- PM கிசான் யோஜனாவின் நான்காவது தவணை – ஜனவரி 2020 இல் வெளியிடப்பட்டது
5- PM கிசான் யோஜனாவின் ஐந்தாவது தவணை – ஏப்ரல் 1, 2020-ல் வெளியிடப்பட்டது
6- PM கிசான் யோஜனாவின் ஆறாவது தவணை – ஆக்ஸ்ட் 1 முதல்
பணம் வரத் தொடங்கியது.
இதுவரை 17,100 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது
பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தை (PMKSNY) ஆறாவது தவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மொத்த தொகையாக 17,100 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 9.9 கோடி விவசாயிகளுக்கு 75,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ALSO READ: PM Kisan மோசடி: கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக முதல்வர்!!