தேசிய போர் நினைவிடத்திற்கு அனைவரும் வருகை தர வேண்டும்: பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற நாள் முதல் மன் கீ பாத் எனும் மனதின் குரல் ரேடியோ நிகழ்ச்சி மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மக்களிடம் உரையாற்றி வருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற நாள் முதல் மன் கீ பாத் எனும் மனதின் குரல் ரேடியோ நிகழ்ச்சி மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் உரையாற்றி வருகிறார். அந்த வகையில், இன்று 85ஆவது மன் கீ பாத் நிகழ்ச்சியின் மூலம் காலை 11.30 மணிக்கு நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
அதில் அவர் குறிப்பிட்ட முக்கிய விஷயங்கள்
இந்த ஆண்டு இந்தியா 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில், அமரர் ஜவான் ஜோதி, நாட்டின் சுதந்திரத்திற்காக தங்களின் இன்னுயிரை தந்த தியாகிகளின் அகச் சுடராக இருப்பதாக, பலர் தனக்கு கடிதம் எழுதியுள்ளதாக தனது உரையில் பிரதமர் குறிப்பிட்டார்.
"இந்திய ஆயுதப் படையின் 'படை வீரர்களிடம்' எனக்கு வந்த சில கடிதங்கள் 'அமர் ஜவான் ஜோதி'யின் முக்கியத்துவத்தையும், நமது தியாகிகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்வில் அது ஏற்படுத்தியுள்ள முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகின்றன," என்று அவர் கூறினார்.
"அனைவரும் தங்கள் குடும்பத்துடன் தேசிய போர் நினைவிடத்தை பார்க்க முயற்சிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அங்கே அபரிமிதமான ஆற்றலையும் உத்வேகத்தையும் உணர்வீர்கள்" என்று பிரதமர் மோடி கூறினார்.
ALSO READ | Watch Video: நேதாஜியின் மின் ஒளி சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!
இந்திய குடியரசு தின நிகழ்ச்சிகள், நேதாஜியின் பிரந்த நாளுடன் தொடங்கி, மகாத்மா காந்தியின் நினைவு நாளுடன் நிறைவு பெறுகிறது என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.
குடியரசு தினகொண்டாட்டங்கள் இந்த ஆண்டு முதல் நேதாஜியின் பிரந்த நாளுடன் தொடங்கியுள்ள நிலையில், நேதாஜியின் சிலை இந்தியா கேட்டில் நிறுவப்பட்டிருப்பது அனைவரையும் பெருமிதம் கொள்ள செய்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் மன் கீ பாத் என்னும் மனதின் குரல் நிகழ்ச்சி என்ற நிலையில், இந்த நிகழ்ச்சி நாடு முழுவதும் உள்ள மக்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக பாஜக பல சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. இன்று காந்தியடிகளின் நினைவு தினம் என்பதால் அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ALSO READ | 75 ஆண்டுகளில் முதன்முறையாக குடியரசு தின அணிவகுப்பு 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்கும்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR