புதுதில்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் ஹாலோகிராம், அதாவது மின் ஒளி சிலையை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். நேதாஜி ஜெயந்தியை முன்னிட்டு சுபாஷ் சந்திரபோஸின் ஹாலோகிராம் சிலை நிறுவப்பட்டது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி, நமது தேசத்திற்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பை நினைத்து ஒவ்வொரு இந்தியனும் பெருமிதம் கொள்வதாக கூறினார். பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில், “நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் ஜெயந்தியில் அவரை தலைவணங்குகிறேன். நமது தேசத்திற்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பிற்காக ஒவ்வொரு இந்தியனும் பெருமிதம் கொள்கின்றனர்” என்றார்.
#WATCH | Prime Minister Narendra Modi unveiled hologram statue of Netaji Subhas Chandra Bose at India Gate on his 125th birth anniversary #ParakramDiwas pic.twitter.com/vGQMSzLgfc
— ANI (@ANI) January 23, 2022
நேதாஜியின் சிலை ஹாலோகிராம் எனப்படும் மின் ஒளி வடிவில் அங்கு திறந்து வைக்கப்படும் எனவும், நேதாஜியின் பிரம்மாண்ட கிராணைட் சிலை அமைக்கும் பணி முடிவடையும் வரை மின் ஒளி சிலை அங்கு திரையிடப்படும் எனவும் அவர் தெரித்தார். மின் ஒளி வடிவிலான சிலை நேதாஜியின் 125வது பிறந்த நாளான ஜனவரி 23ஆம் தேதி திறந்து வைக்க உள்ளேன் எனவும் முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடிட்விட்டரில் பதிவிட்டார்.
மேலும், ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழா விமரிசையாக கொண்டாடப்படும் நிலையில், இது தொடர்பான கொண்டாட்டங்களை மத்திய அரசு ஜனவரி 24ம் தேதியே தொடங்கி விடும் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த ஆண்டு முதல் இதில் புதிய மாற்றத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. அதாவது, குடியரசு தின விழாவுடன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளையும் கொண்டாடும் வகையில் மத்திய அரசு முக்கிய முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | 75 ஆண்டுகளில் முதன்முறையாக குடியரசு தின அணிவகுப்பு 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்கும்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR