நாட்டு மக்களிடையே உரையாற்றினார் PM Modi: பிரதமர் உரையின் முக்கிய அம்சங்கள்!!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று மாலை நாட்டு மக்களிடையே உரையாற்றினார். இரண்டாவது அலையில், நாடு சந்தித்த சவால்கள், தடுப்பூசி தொடர்பான தகவல்கள், மூன்றாம் அலைக்கான ஆயத்தங்கள் என அவரது உரையில் பல முக்கிட விஷயங்களைப் பற்றி பிரதமர் தெளிவு படுத்தினார்.
புது தெல்லி: இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று மாலை நாட்டு மக்களிடையே உரையாற்றினார். இரண்டாவது அலையில், நாடு சந்தித்த சவால்கள், தடுப்பூசி தொடர்பான தகவல்கள், மூன்றாம் அலைக்கான ஆயத்தங்கள் என அவரது உரையில் பல முக்கிட விஷயங்களைப் பற்றி பிரதமர் தெளிவு படுத்தினார்.
பிரதமர் உரையின் சில முக்கிய அம்சங்களை இங்கே காணலாம்:
- ஜூன் 21 முதல் புதிய தடுப்பூசி கொள்கை அமல்படுத்தப்படும்.
- ஜூன் 21 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசிகள் செலுத்தப்படும்.
- தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசி (Vaccine) செலுத்தலுக்கு சேவை கட்டணமாக ரூ.150-ஐ மட்டுமே வசூலிக்க முடியும்.
- இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் 25 % தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகள் வாங்கி செலுத்தலாம். மீதமுள்ள 75 சதவிகித தடுப்பூசிகளை மத்திய அரசே வாங்கி மாநில அரசுகளுக்கு வழங்கும்.
- கொரோனா (Coronavirus) தடுப்பூசி விநியோகத்தை மத்திய அரசே முழுமையாக நடத்தும்.
ALSO READ:PM Modi உரை: மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசி, ஜூன் 21 முதல் புதிய தடுப்பூசி கொள்கை
- மாநில அரசுகள் தடுப்பூசிகளுக்கான எந்த செலவையும் செய்யத் தேவை இல்லை.
- தீபாவளி வரை ரேஷன் கடைகளில் உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும்.
- தடுப்பூசி பற்றிய தவறான கருத்துகளை பரப்புவதில் ஈடுபட்டுள்ளவர்கள் அதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இளைஞர்கள் தடுப்பூசி குறித்த விழிப்பூணர்வை மக்களிடையே கொண்டு வர வேண்டும்.
- நாட்டில் இன்னும் பல புதிய தடுப்பூசிகளுக்கான ஆய்வு நடைபெற்று வருகிறது. குழந்தைகளுக்கான தடுப்பூசிகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
- குழந்தைகளுக்கான இரண்டு தடுப்பூசிகளின் சோதனைகள் முடிவுக்கு வரும் நிலையில் உள்ளன. இது தவிர மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்தும் உருவாக்கப்பட்டு வருகின்றது.
- நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கில் (Corona Lockdown) பல தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இதனால் கொரோனா தொற்று முடிவடைந்துவிட்டதாக எண்ணி மக்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது.
- பொது மக்கள் தொடர்ந்து கொரோனாவுக்கான நெறிமுறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடைபிடிக்க வேண்டும்.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை சற்றே குறந்துள்ள நிலையில், தடுப்பூசிகள் பற்றிய சில குழப்பங்களை இன்று பிரதமர் தீர்த்து வைத்துள்ளார். மாநிலங்களுக்கான இலவச தடுப்பூசி குறித்த அறிவிப்பு பெரும் நிவாரணத்தி அளித்துள்ளது.
ALSO READ: New Disease Found: பிறந்த குழந்தைக்கு புதுவித நோய், அதிர்ச்சியில் மருத்துவர்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR