COVID-19 வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் கோவாக்சின், கோவிஷீல்ட் மற்றும் ஸ்பூட்னிக் வி ஆகிய மூன்று தடுப்பூசிகள் தற்போது, இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள நிலையில், மேலும் சில தடுப்பூசிகளும் பயன்பாட்டிற்கு வர உள்ள, அவற்றில் ஒன்று கோர்பேவாக்ஸ் (Corbevax) ஆகும். 30 கோடி டோஸ் கோர்பேவாக்ஸை வாங்குவதற்காக, ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பயாலஜிகல்-இ (Biological-E) நிறுவனத்திற்கு ரூ.1,500 கோடி முன்பணம் என்று மத்திய அரசு வியாழக்கிழமை (ஜூன் 3) தெரிவித்தது.
ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் 30 கோடி டோஸ் கோர்பேவாக்ஸ் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றில் குறைந்தது 7.5 கோடி டோஸ் செப்டம்பர் மாதத்திற்குள் கிடைக்கும் என கூறப்படுகிறது.
அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தைப் பெறாத தடுப்பூசியை வாங்குவதற்கு மத்திய அரசு ஆர்டர் கொடுத்திருய்ப்பது இதுவே முதல் முறை.
ALSO READ | நம் சித்தர்கள் தந்த அற்புத யுக்தி; கொரோனாவிலிருந்து காக்கும் மூச்சு பயிற்சி
கோர்பேவாக்ஸ் என்றால் என்ன?
கோர்பேவாக்ஸ் என்பது "மறுசீரமைப்பு புரத துணை-அலகு" (recombinant protein sub-unit) தடுப்பூசி ஆகும், அதாவது இது SARS-CoV-2 இன் ஒரு குறிப்பிட்ட பகுதியான ஸ்பைக் புரதத்தினால் (Spike protein) ஆனது. ஸ்பைக் புரதம், வைரஸ்கள் உடலில் உள்ள உயிரணுக்களுக்குள் நுழைய அனுமதிக்கிறது. இருப்பினும், ஸ்பைக் புரதம் மட்டும் கொடுக்கப்படும்போது, உடலில் ஒரு நோயெதிர்ப்பு சக்தி உருவாகும். இது வைரஸை எதிர்த்துப் போராட உதவும்.
இந்த தடுப்பூசி ஹூஸ்டனில் (Houston) உள்ள பேய்லர் காலேஜ் ஆப் மெடிசினுடன் (Baylor College of Medicine) கூட்டாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி திட்டத்திற்கு, மத்திய அரசின், பயோடெக்னாலஜி துறையின் நிதியுதவி மூலம் ரூ.100 கோடிக்கு மேல் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது
Biological E தயாரித்துள்ள கோர்பேவாக்ஸ் என்ற தடுப்பூசி தற்போது 3 ஆம் கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளது.
கோர்பேவாக்ஸ் விலை நிர்ணயம்
கோர்பேவாக்ஸ் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டு ஒப்புதல் கிடைத்தவுடன், இந்திய சந்தையில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் தடுப்பூசியாக இது இருக்கக் கூடும். கோர்பேவாக்ஸ் இரண்டு டோஸ்களின் விலை ரூ.500 க்கும் அல்லது ரூ.400-க்கும் குறைவாக நிர்ணயிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் விலை நிர்ணயம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று பயாலஜிகல்-இ நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ALSO READ | இந்தியாவில் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ள பிற தடுப்பூசி விபரங்கள்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR