3 Summit-களில் இந்த மாதம் Narendra Modi மற்றும் Xi Jinping நேருக்கு நேர் சந்திப்பார்கள்!!
நவம்பர் மாதத்தில் நடைபெறும் மூன்று வெவ்வேறு மெய்நிகர் உச்சி மாநாடுகளில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் மூன்று முறை சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி: நவம்பர் மாதத்தில் நடைபெறும் மூன்று வெவ்வேறு மெய்நிகர் உச்சி மாநாடுகளில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் (Xi Jinping) மூன்று முறை சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நவம்பர் 10 ம் தேதி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தலைவர்கள் உச்சிமாநாடு (SCO), நவம்பர் 17 அன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு மற்றும் நவம்பர் 21-22 அன்று ஜி 20 உச்சி மாநாடு ஆகியவற்றில் இருவரும் பங்கெடுப்பார்கள்.
பிரிக்ஸ் மற்றும் SCO குழுமத்தின் தலைமை நாடான ரஷ்யா இந்த இரண்டு உச்சிமாநாடுகளை நடத்தும். G20 உச்சிமாநாட்டை சவுதி அரேபியா நடத்தும்.
இந்தியா-சீனா எல்லையில் பதட்டங்கள் துவங்கிய பிறகு இரு தலைவர்களும் ஒன்றாக ஒரே சர்வதேச அரங்கில் சந்திப்பது இதுவே முதல் முறையாகும். ஜூன் 15 ம் தேதி கால்வான் சம்பவத்திற்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ளன. இதில் 20 இந்திய வீரர்கள் இறந்தனர். அதே நேரத்தில் சீனா வீரர்கள் பலரும் உயிரிழந்தனர்.
ALSO READ: 'கடல் விமான' சேவைக்காக மேலும் 14 நீர் நிலையங்களை உருவாக்க அரசு திட்டம்..!!!
கடந்த காலங்களில், இந்தியாவுக்கும் சீனாவிற்கும் (China) இடையில் இதுபோன்ற உச்சிமாநாடுகளின் சந்தர்ப்பங்களில் உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. இரு தலைவர்களும் இத்தகைய பெரிய கூட்டங்களின் போது தங்களுக்குள் ஒரு சிறிய சந்திப்பை நடத்திக்கொள்வது வழக்கமாகிவிட்டது. ஆனால், இந்த முறை அத்தகைய சந்திப்பு எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை. சந்திப்பு மெய்நிகர் முறையில் நடக்கிறது என்பது ஒரு பெரிய காரணமாக இருந்தாலும், தற்போதுள்ள பதட்டங்களும் இதற்கு ஒரு காரணமே!!
இதுபோன்ற உச்சிமாநாடுகள் மெய்நிகர் முறையில் நடப்பது இதுவே முதல் முறையாகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில், சவுதி அரேபியா ஜி 20 தலைவர்களின் மெய்நிகர் உச்சிமாநாட்டை அற்புதமாக நடத்தியது. தொற்றுநோயைக் கையாள்வதற்கான செயலுத்தி குறித்து ஒன்றிணைந்து கலந்தாலோசிப்பது இந்த உச்சிமாநாட்டின் குறிக்கோளாக இருந்தது. இந்த சந்திப்பில் பிரதமர் மோடி மற்றும் சீன ஜனாதிபதி ஜி இருவரும் கலந்து கொண்டனர். ஆனால் அந்த நேரத்தில் உறவுகள் இப்போது இருக்கும் அளவு மோசமானதாக இருக்கவில்லை.
நவம்பர் ஏற்கனவே உச்சிமாநாடு மாதமாக அழைக்கப்படுகிறது. SCO, BRICS மற்றும் G 20 தவிர, இந்த மாதம் நவம்பர் 13-15 முதல் ஆசியான் மெய்நிகர் உச்சிமாநாடும் நடைபெறும். SCO அரசாங்கத் தலைவர்கள் நவம்பர் 30 ம் தேதி சந்திப்பார்கள்.
ASEAN வியட்நாம் நாட்டில் நடக்கும் அதே வேளையில், அரசாங்க தலைவர்களின் SCO மாநாடு புது தில்லியால் நடத்தப்படும். நெறிமுறை காரணமாக இந்தியா இந்த மாநாட்டிற்கு பாகிஸ்தானையும் சீனாவையும் அழைக்கும்.
இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா மற்றும் நான்கு மத்திய ஆசிய நாடுகளான கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் இந்த அமைப்பில் உள்ளன.
ALSO READ: பாதுகாப்பு படையினரின் மிகப்பெரிய வெற்றியாக ஹிஸ்புல் கமாண்டர் கொலை..!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR