புதுடெல்லி: பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நாளை 15-வது ‘ஆசியான்’ மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, பிரதமர் மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் பிலிப்பைன்ஸ் சென்றடைந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, சீன பிரதமர் லீ கெ கியாங், ரஷிய பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ், ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல், வியட்நாம் பிரதமர் கியூயன் ஷூயாங் புக், நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டன், பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியூட்ரேட் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் இந்த மநாட்டில் கலந்து கொள்கின்றனர். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் இம்மாநாட்டில் பங்கேற்கிறார். 


இப்பயனத்தின் போது ரஷிய பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ், சீன பிரதமர் லீ கெ கியாங் மற்றும் வெளிநாட் தலைவர்கள் பலரையும் பிரதமர் மோடி சந்திக்கின்றார். 



நவம்பர் 14 ஆம் தேதி நடைபெறும் கிழக்கு ஆசிய மாநாட்டிலும் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.