நாட்டில் அனைவருக்கும் தட்டுப்பாடின்றி தடுப்பூசி கிடைக்க செய்வதில் அரசு உறுதி: பிரதமர் மோடி
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மீண்டும் வேகமாக பரவி வரும் நிலையில், அனைத்து மாநில ஆளுநர்களுடன் பிரதமர் கலந்தோசனை நடத்தினார்.
நாட்டில் கொரொனா பரவல், இரண்டாவது அலை தொடங்கி, தொற்று எண்ணிக்கை தினம் தினம் உச்சத்தை தொட்டு வரும் நிலையில், நிலைமையை கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இது தொடர்பாக பிரதமர் மோடி (PM Narendra Modi), முன்னதாக மாநில முதல்வர்கள் மற்றும் பல்வேறு நிபுணர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்திய நிலையில், நேற்று, மாநில ஆளுநர்களுடன் ஆலோசனை நடத்தினார். வீடியோ கான்பரென்சிங் மூலம் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில், பங்கேற்ற பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள், தங்கள் மாநிலங்களில் பாதிப்பு நிலவரங்களை எடுத்துரைத்தனர்.
அப்போது உரையாற்றிய பிரதமர் மோடி , இது வரை 11 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில்,10 கோடி பேருக்கு தடுப்பூசிகள் என்ற மைல்கல்லை மிக விரைவாக எட்டிய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றிருக்கிறது என குறிப்பிட்டார்.
கொரோனா பரவலை தடுக்க ஏற்படுத்தப்பட்ட வழிமுறைகளை, மக்கள் கட்டாயமாக பின்பற்றுமாறு ஊக்குவிப்பதில் ஆளுநர்களின் பங்கு முக்கியம் எனவும், செஞ்சிலுவை சங்கம், பல்கலைக்கழகங்கள் மற்றும் முன்னாள் படை வீரர்களை ஒருங்கிணைத்து, அவர்கள் மூலமாக மக்களுக்கு, ஆளுநர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
மத்திய மாநில அரசுகளுக்கு இடையில், பாலமாக செயல்படும் ஆளுநர்கள், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்க, மாநிலத்தில் உள்ள அனைத்து அமைப்புகளையும் திறம்பட பயன்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
நாடு முழுவதும் தட்டுப்பாடு ஏதும் இன்றி, போதுமான அளவுக்கு தடுப்பூசி கிடைக்கச் செய்வதில் அரசு உறுதியாக இருக்கிறது எனவும் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மக்களின்பங்களிப்பு மிகச் சிறப்பாக இருந்த நிலையில், இந்த ஆண்டும் மக்கள் மக்கள் ஒத்துழைப்புடன் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதும் சாத்தியமே எனக் குறிப்பிட்டார்.
தடுப்பூசி, சிகிச்சை போன்றவை தொடர்பான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுடன், ஆயிர்வேத சிகிச்சைகள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதார துறை அமைச்சர் ஹர்சவர்தன் ஆகியோரும் பங்கேற்றனர்.
ALSO READ | சில மாநிலங்களில் சரியான திட்டமிடல் இல்லை, 9% தடுப்பூசிகள் வீணாகியுள்ளன: மத்திய அரசு
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR