பிரதமர் மோடி எம்ஏ படித்தார்... அவர் ஒரு படிப்பாளி - அடித்துச் சொல்லும் மூத்த பத்திரிகையாளர்!
PM Modi MA Degree Controversy: பிரதமர் நரேந்திர மோடி 1981ஆம் ஆண்டு முதுகலை படித்துக்கொண்டிருக்கும்போது, முதன்முறையாக அவரை சந்தித்ததாக மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.
PM Modi MA Degree Controversy: ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு விவகாரத்தை தொடர்ந்து கேள்வியெழுப்பி வருகிறார். அதுமட்டுமின்றி பிரதமர் மோடியின் கல்வித் தகுதி குறித்த விவரங்களையும் கேட்டு வருகிறார்.
பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு விவரங்களைக் கோரி அவர் மனு தாக்கல் செய்திருந்தார். இருப்பினும், இந்த ஆண்டு மார்ச் மாதம், குஜராத் உயர் நீதிமன்றம், தலைமை தகவல் ஆணையரின் (CIC) 2016 உத்தரவின்படி, பிரதமரின் எம்ஏ பட்டம் குறித்த தகவல்களை கெஜ்ரிவாலுக்கு வழங்குமாறு குஜராத் பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டது.
பட்டங்கள் போலியா?
மேலும், இதற்கு ரூ. 25 ஆயிரம் தொகையை குஜராத் மாநில சட்ட சேவைகள் ஆணையத்திடம் டெபாசிட் செய்யும்படி கெஜ்ரிவாலிடம், உயர் நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. இந்த உத்தரவைத் தொடர்ந்து, குஜராத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவு மக்கள் மனதில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது என்று கெஜ்ரிவால் கூறினார். "பிரதமரின் பட்டங்கள் முற்றிலும் போலியானவை என்று மக்கள் இப்போது ஊகிக்கத் தொடங்கியுள்ளனர்" என்றார்.
காங்கிரஸ் கட்சியும், கெஜ்ரிவாலும் தொடர்ந்து, பிரதமர் மோடியின் கல்வி தகுதி மீது கேள்வி எழுப்பி வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், "புதிய இந்தியாவில் வெளிப்படைத்தன்மைக்கு கூட வரம்பு உள்ளது. இதைத்தான் 'முழு அரசியல் அறிவியலும்' போதிக்கிறது" என பதிவிட்டிருந்தார்.
கெஜ்ரிவால் வாதம்
கடந்த மாதம், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி அணுகினார். பிரதமர் மோடியின் பட்டம் ஆன்லைனில் கிடைக்கும் என்ற குஜராத் பல்கலைக்கழகத்தின் கூற்றுக்கு மாறாக, பல்கலைக்கழக இணையதளத்தில் அத்தகைய பட்டம் எதுவும் கிடைக்கவில்லை என்று கெஜ்ரிவால் வாதிட்டிருந்தார்.
இந்த நிலையில், பிரதமர் மோடி எம்ஏ படித்துக்கொண்டிருந்தபோது, அவரின் கல்லூரியில் தான் அவரை சந்தித்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். மூத்த பத்திரிக்கையாளரான ஷீலா பட், முதுகலைப் பட்டம் தொடர்பாக பிரதமர் மோடியை டெல்லி முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியும் குறிவைப்பது குறித்தும் பேசினார். .
மௌனம் காத்த மோடியின் நண்பர்
"1981இல் மோடியை முதன்முறையாக அவர் எம்.ஏ. இரண்டாம் பாகம் படித்துக் கொண்டிருந்தபோது அவரைச் சந்தித்தேன். அவருடைய வழிகாட்டி பேராசிரியர் பிரவின் ஷேத், அவர் எனது வழிகாட்டியாகவும் இருந்தார். அவர் (பிரதமர் மோடி) மிகவும் படிப்பாளி" என்று ஷீலா பட் ANI செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இப்போது வழக்கறிஞராக இருக்கும் அவரது வகுப்பு நண்பர் ஒருவரை நினைவு கூர்ந்ததாகவும் அவர் சொன்னாள். "சிறிது காலத்திற்கு முன்பு அரவிந்த் கெஜ்ரிவாலும், காங்கிரஸ் கட்சியும் ட்விட்டரில் பிரதமர் மோடியை எழுதப் படிக்கத் தெரியாதவர் எனப் பல செய்திகளை வெளியிட்டபோது நான் அவரை அழைத்தேன். நான் மோடியின் நண்பரை அழைத்து, இதுகுறித்து பொதுவெளியில் பேச சொன்னேன், ஆனால் அவர் இதுகுறித்து மௌனமாக இருக்கப்போவதாக தெரிவித்தார்" என்றார்.
மேலும் படிக்க | வெளுத்து வாங்கும் மழை, இந்தியா கேட்டையும் பதம் பார்க்குமா? தரையில் ஓடும் யமுனை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ