உடுப்பி பெஜாவர் மடத்தின் சுவாமி விஷ்வேஷா தீர்த்தர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள பெஜாவர் மடத்தின் மடாதிபதியாக இருந்தவர  சுவாமி விஷ்வேஷ தீர்த்தர். 88 வயதான இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார்.


நேற்று இரவு மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட அவர் உடுப்பியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சுவாமி விஷ்வேஷா தீர்த்தர் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார் என உடுப்பி பெஜாவர் மடத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பெஜாவர் மடத்தின் சுவாமி விஷ்வேஷா தீர்த்தர் காலமானதை அறிந்த முதல் அமைச்சர்  எடியூரப்பா தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். சுவாமிஜியின் இறுதிச்சடங்கு இன்று நடக்கும்.


இந்நிலையில் உடுப்பி பெஜாவர் மடத்தின் சுவாமி விஷ்வேஷா தீர்த்தர் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பெஜாவர் மடத்தின் சுவாமியிடம் இருந்து பாடங்கள் கற்றுக் கொள்ள வாய்ப்பு கிடைத்தது எனது பாக்கியம். உடுப்பி மக்களின் வாழ்வில் வழிகாட்டும் ஒளியாக இருந்த சுவாமிஜி, இனி மக்களின் மனங்களிலும் நிலைத்திருப்பார்.


 



 


என பதிவிட்டுள்ளார்.


மேலும் அன்மை செய்தி, சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN தொலைக்காட்சியை பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.