தூய்மை இந்தியா திட்டப்பணிக்காக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிரதமர் மோடிக்கு ‘குளோபல் கோல்கீப்பர்’ என்ற விருது வழங்கப்பட்டது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நியூயார்க்: பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் 'ஸ்வச் பாரத்' பிரச்சாரத்திற்கான 'உலகளாவிய கோல்கீப்பர் விருது' பிரதமர் நரேந்திர மோடிக்கு புதன்கிழமை வழங்கப்பட்டது. இந்த விருதை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் ஓரங்களில் பில் கேட்ஸ் வழங்கினார். 


மக்களின் ஆரோக்கியம் மற்றும் நாட்டின் சுகாதார மேம்பாட்டிற்காக ‛துாய்மை இந்தியா' திட்டத்தை, கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். அனைத்து மக்களுக்கும் கழிப்பிட வசதி செய்து கொடுப்பது, கிராமங்கள் மற்றும் நகரங்களை துாய்மையாக பராமரிப்பது போன்றவை இந்த திட்டத்தின் நோக்கம்.


இந்நிலையில், ‛துாய்மை இந்தியா' திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக, பிரதமர் மோடிக்கு, அமெரிக்காவின் உயரிய விருது வழங்கப்பட்டது. மைக்ரோ சாப்ட் நிறுவனர் மற்றும் தொழிலதிபர் பில்கேட்ஸ், மெலிண்டா பில்கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் Global goalkeeper award வழங்கப்பட்டது. இந்தியாவில் தூய்மை பாரதம் திட்டத்தை மோடி தொடங்கிவைத்ததற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. விருதை ஏற்று நன்றி தெரிவித்த மோடி இந்தியாவில் 11 கோடி கழிவறைகள் கட்டப்பட்டதாகவும் அது பெரும்பாலும் ஏழை மக்களுக்குத்தான் பலன் அளித்துவருகிறது என்றும் குறிப்பிட்டார்.



குழந்தைகளுக்கு ஏற்பட்ட இருதய நோய்கள் இந்தியாவில் குறைந்துள்ளன என்றும் பெண்கள் உடல் நலத்திலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் மோடி தெரிவித்தார்.


மேலும், 'பில் - மெலின்டா கேட்ஸ்' தொண்டு நிறுவன அறிக்கையில், கிராமப்புற சுகாதாரத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தால், குழந்தைகளின் இதய பிரச்னை குறைந்துள்ளதாகவும், பெண்களின் உடல் நலம் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. துப்புறவு இலக்கை அடைவது மட்டுமல்லாமல், மற்ற இலக்குகளை அடையவும் உறுதியுடன் இந்தியா செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 'பிட் இந்தியா' மூலம் உடலுறுதி மற்றும் உடல்நலனை பேணிக்காக்க ஊக்கப்படுத்தி வருகிறோம்" என அவர் தெரிவித்துள்ளார்.