ஐ.நாவில் இனியும் எத்தனை ஆண்டுகள் இந்தியா வெளியில் இருக்க வேண்டும்? பிரதமர் மோடி அதிரடிக் கேள்வி!

ஐ.நாவில் இணைய இனியும் எத்தனை ஆண்டுகள் இந்தியா காத்திருக்க வேண்டும் என்பது போன்ற அதிரடிக் கேள்விகளை இன்று பிரதமர் மோடி நேரடியாகவே எழுப்பினார்.
புதுடெல்லி: ஐ.நா பொதுச்சபையின் 75 ஆண்டுகால வரலாற்றில் ஆண்டுப் பொதுக்குழு கூட்டம் உலகத் தலைவர்களின் நேரடி பங்கேற்பு இல்லாமல் நடைபெறுகிறது. உலக நாடுகளின் தலைவர்களின் உரைகள் காணொளியாகப் பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இந்திய நேரப்படி இன்று மாலை சுமார் ஆறரை மணிக்கு நரேந்திர மோடியின் உரையின் ஒளிபரப்பானது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் உரை ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொதுச்சபைக் கூட்டத்தில் ஒளிபரப்பானது. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஐ.நாவில் இருந்து இந்தியா வெளியில் இருக்க வேண்டியிருக்கும் என்று கேள்வி எழுப்பிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா வளர்ந்தாலும், யாரையும் அச்சுறுத்தாது என்று கூறினார்.
ஐ.நாவில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும், அந்த சீர்திருத்தங்களுக்காக இந்தியா காத்திருப்பதாக குறிப்பிட்டார். ஐ.நா அனுசரிக்கும் சர்வதேச யோகா தினம் இந்தியாவால் வழங்கப்பட்டது என்று கூறினார்.
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா, தனது அனுபவங்களை உலக நன்மைக்காகவே பயன்படுத்தும். போதைப்பொருள், ஆயுதக் கடத்தல் ஆகியவற்றுக்கு இந்தியா என்றுமே எதிராகவே இருந்துள்ளது என்று பிரதமர் மோடி சுட்டிக்கட்டினார்.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் காலத்தில் 150க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்திய மருத்துவ உதவிகள் வழங்கி உள்ளதை பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.
Also Read | Happy Birthday Manmohan ji என்று காங்கிரஸ் வெளியிட்ட சாதனை வீடியோ