புதுடெல்லி: இந்தியாவும் ஜப்பானும் ஒரே விதமான கொள்கைகளை  கொண்டுள்ளதோடு, பரஸ்பர நலனுக்காக நீண்ட காலமாக ஒத்துழைப்புடன் பணியாற்றி வருகின்றன என்று ஜப்பானின் பிரதமர் யோஷிஹைட் சுகா (PM Yoshihide Suga) வியாழக்கிழமை (ஜூலை 15) தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதமர் நரேந்திர மோடி, வாரணாசியில் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மாநாட்டு மையமான ‘ருத்ராக்‌ஷம்’ உட்பட  ₹1,583 மதிப்பிலான திட்டங்களை திறந்து வைத்தார்.  இதனை ஒட்டி வீடியோ செய்தியை அனுப்பினார் ஜப்பான் பிரதமர்


பதிவுசெய்யப்பட்ட செய்தியில், "ஜப்பானும் இந்தியாவும் சுதந்திரம், ஜனநாயகம், ஒத்துழைப்பு, ப்ரஸ்பர நலன் ஆகியவற்றில் ஒத்த கருத்துக்களை கொண்டுள்ளன " என்றும் "இரு நாடுகளும் நீண்ட காலமாக, ஒத்துழைப்புடன் நல்லுறவைப் பேணி வருகின்றன" என்றும் கூறினார்.


மோடியின் தொகுதியான வாரணாசியில் கட்டப்பட்டுள்ள சர்வதேச மாநாட்டு மையம் ஜப்பானிய உதவியுடன் கட்டப்பட்டுள்ளது. ‘சிவ லிங்கம்’ வடிவத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த மாநாட்டு மையத்தில் ஆடிட்டோரியத்தில் 1200 இருக்கைகள் உள்ளன. அதன் முகப்பில் 109 'ருத்ராட்சங்கள்' அலங்கரிக்கப்பட்டுள்ளது.


ALSO READ | ISRO: ககன்யானின் விகாஸ் இன்ஜின் சோதனை வெற்றி; எலான் மஸ்க் வாழ்த்து


ஜப்பான் பிரதமர் கூறுகையில், "ஜப்பானின் மானிய உதவி மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பின் அடையாளமாக மாநாட்டு மையம் சிறப்பு மிக்க நகரத்தில் கட்டப்பட்டதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்றார்.


இந்த நிகழ்வில், சர்வதேச மையத்தை அமைப்பதில் ஜப்பானின் பங்கை பிரதமர் மோடி பாராட்டினார். தற்போதைய ஜப்பான் பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே ஆகிய இருவரின் பங்கையும் எடுத்துரைத்தார்.


புல்லட் ரயில் திட்டம், தனிப்பட்ட சரக்கு நடைபாதை மற்றும் பிற திட்டங்களில் டோக்கியோ எவ்வாறு ஈடுபட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டி இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான நடபு என்பது  “இயற்கையான நட்பு ” என பிரதமர் மோடி கூறினார். இந்தியாவுக்கான ஜப்பானின் தூதர் சடோஷி சுசுகியும் (Satoshi Suzuki) வாரணாசியில் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார்.


ALSO READ | உலகளாவிய 5G நிலையங்களில் 70% எங்களிடம் தான் உள்ளது: சீனா


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR