உலகின் பெரும்பான்மையான நாடுகளுக்கு இன்னும் 5ஜி நெட்வொர்க் கிடைக்காத நிலையில் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்க வேண்டும் என்ற நோக்கில் பல நாடுகளுக்கு இடையில் போட்டி நிலவுகிறது.
சீன (China) அரசு வழங்கும் பல தரவு செயல்பாட்டு அமைப்புகள் மூலம் இணைய உளவு நடவடிக்கைக மேற்கொள்ளப்படுவதாக அச்சுறுத்தல் உள்ள நிலையில், சீனா தொடர்ந்து 5 ஜி மொபைல் தொழில்நுட்பத்துறையில் முன்னேறி வருகிறது. மேலும், ஏற்கனவே உலகில் உள்ள 5G அடிப்படை நிலையங்களில் 70 சதவீதம் தங்களிடம் உள்ளதாக சீன அரசு ஆதரவு ஊடக நிறுவனம் குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
அதில் வெளியான அறிக்கையில், சீனாவில் 9,16,000 5G அடிப்படை நிலையங்கள் சீனாவிடம் உள்ளதாகவும், இது உலகின் மொத்த எண்ணிக்கையில் 70% ஆகும், அதே நேரத்தில் 5ஜி தொழில்நுட்பத்தினல, இணைக்கப்பட்ட சாதனங்களின் எண்ணிக்கை இப்போது 36.50 கோடியைத் தாண்டியுள்ளது, இது உலகளவில் 80% ஆகும்.
சீன 5 ஜி தொழில்நுட்பத்தைப் பற்றிய உலகளாவிய பாதுகாப்பு கவலைகள்
- சீன தொலைத்தொடர்பு விற்பனையாளர்கள் ஹவாய் Huawei மற்றும் ZTE 5 ஜி உபகரணங்கள் சந்தையில் முக்கிய நிறுவனங்கள்.
ALSO READ | 5G இணைப்பை துரிதப்படுத்த அதிரடி நடவடிக்கைகளை எடுக்கும் மோடி அரசாங்கம்: முழு விவரம் உள்ளே
- இங்கிலாந்து உட்பட பல நாடுகளில் 5 ஜி தொழில்நுடப் பரிசோதனையில் பங்கேற்க ஹவாய் தடை செய்யப்பட்டுள்ளது.
- அமெரிக்க தொழில்நுட்பம் அல்லது மென்பொருளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதற்கும் ஹவாய் நிறுவனதிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
- ஹவாய் கிட்டத்தட்ட சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனம் என அமெரிக்கா கருதுகிறது
- சீனாவின் 2017 தேசிய புலனாய்வு சட்டத்தின் கீழ் சீன அரசாங்கத்தின் சார்பாக உளவுத்துறை பணிகளை செய்ய ஹவாய் உட்பட அனைத்து சீன நிறுவனங்களுக்கு சீனா உத்திரவிட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
- 2020 டிசம்பர் 31 க்குப் பிறகு, இங்கிலாந்தில் மொபைல் ஆபரேட்டர்கள் புதிய ஹவாய் 5ஜி கருவிகளை வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது, மேலும் 2027 க்குள் அனைத்து ஹவாய் 5ஜி உபகரணங்களையும் தங்கள் நெட்வொர்க்குகளிலிருந்து அகற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
- ஐந்தாவது தலைமுறை வயர்லெஸ் தொழில்நுட்பம், 5 ஜி, அதன் மிகவும் விரைவாக செயல்படும் அதிநவீன தொழில்நுட்பமாகும்.
ALSO READ | விரைவில் வருகிறது 5G புரட்சி: வேற லெவல் தொழில்நுட்பத்தை அனுபவிக்க தயாராகுங்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR