இந்திய பிரதமர் மோடி இத்தாலிய பிரதமர் மரியோ டிராகியை சந்தித்தார், இருதரப்பு உறவுகளை பன்முகப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். துகிறார்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெள்ளிக்கிழமை (அக்டோபர் 29) ரோமில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டிற்காக இத்தாலி சென்றிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இத்தாலிய பிரதமர் மரியோ டிராகியுடன் முதன்முறையாக  நேரில் சந்தித்துப் பேசினார். 


இந்தியப் பிரதமரை சிறப்பு செய்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்தியப் பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இது தொடர்பான தகவல் வெளியிடப்பட்டது.  இரு தரப்பு உறவுகளை பன்முகப்படுத்துவது குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி செய்துள்ள இந்த டிவிட்டர் செய்தியில்,  "இந்தியா-இத்தாலி கூட்டாண்மையை ஒருங்கிணைக்கும் வகையில் இரு தலைவர்களும் கலந்தாலோசித்தனர்.  தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கு முன்னதாக, இரு தலைவர்களும் மரியாதை நிமித்தம் சந்தித்துப் பேசினார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  



இந்தியா - இத்தாலி உறவுகள்


ஐரோப்பிய ஒன்றியத்தில் இந்தியாவின் முதல் ஐந்து வர்த்தக பங்காளிகளில் இத்தாலியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இத்தாலிய இறக்குமதியின் பூர்வீக நாடாக, 1.2 சதவீதத்துடன் இந்தியா 19 வது இடத்தில் உள்ளது,  


ஏப்ரல் 2000 முதல் டிசம்பர் 2020 வரையிலான காலக்கட்டத்தில் 3.02 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரையிலான அந்நிய நேரடி முதலீட்டில் இத்தாலி 18வது இடத்தில் உள்ளது.


Read Also | அரசுக்கு முன் கையை கட்டிக்கொண்டு இருப்பேன் என நினைக்க வேண்டாம்: எச்சரிக்கும் பாஜக எம்பி


பிரதமர் மோடியின் ரோம் பயணம்


வெள்ளிக்கிழமை ரோம் வந்தடைந்த இந்தியப் பிரதமரை இத்தாலி அரசின் மூத்த அதிகாரிகள் மற்றும் இத்தாலியில் உள்ள இந்தியத் தூதர் வரவேற்றனர்.


இத்தாலிக்கு சென்ற பிரதமர் மோடி "முக்கிய உலகளாவிய பிரச்சினைகளை விவாதிக்கும் முக்கியமான மன்றமான ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்க ரோம் வந்தடைந்தேன்" என்று ட்வீட் செய்துள்ளார், 



தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு ரோமில் அமைந்துள்ள பியாஸ்ஸா காந்தி (Piazza Gandhi) சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பிரதமர் மோடியை, சமஸ்கிருத முழக்கங்களை எழுப்பிய வெளிநாடு வாழ் இந்திய மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.


ALSO READ: புனித் ராஜ்குமார் மறைவிற்கு அஜித் இரங்கல்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR