பிரதமர் மோடியை சந்தித்தார் ஷரத் பவார்: 50 நிமிட சந்திப்பால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சரத் பவார் இன்று (சனிக்கிழமை) புதுடில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
புதுடெல்லி: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சரத் பவார் இன்று (சனிக்கிழமை) புதுடில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இது மகாராஷ்டிரா மற்றும் இந்திய அரசியலில் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஷரத் பவார் பிரதமர் மோடியை (PM Modi) சந்திக்கவுள்ளார் என்ற செய்தியே அரசியல் வட்டாரங்களில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தின. அந்த நிலையில், இந்த சந்திப்பு 50 நிமிடங்கள் நீடித்த நிலையில், பரபரப்பு மேலும் அதிகமானது.
மகாராஷ்டிராவில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸின் கூட்டணியான மகா விகாஸ் அகாதியின் அரசாங்கம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய அமைச்சரவை விரிவாக்கத்திற்குப் பிறகு, இந்த கூட்டணியில் பல தலைவர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டதாகவும் பல தகவல்கள் வந்தன.
ALSO READ: COVID-19: பிரதமர் மோடி மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 6 மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை
மகாராஷ்டிராவில் மகாவிகாஸ் அகாடி அரசாங்கம் அமைந்து சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. சித்தாந்த ரீதியாக மாறுபட்ட கட்சிகள் ஒன்றுபட்டு அரசாங்கம் அமைத்தன. இந்த அரசாஙம் எத்தனை நாட்கள் நீடிக்கும் என்ற கேள்வி பலரது மனதில் எழுந்த நிலையில், இரு ஆண்டுகளாக இந்த அரசாங்கம் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றது.
2019 மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பாஜக (BJP) 104 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும், என்சிபி 54 இடங்களிலும், காங்கிரஸ் 43 இடங்களிலும் வெற்றி பெற்றது.
இருப்பினும், அடுத்து நடக்கவிருக்கும் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் தனியாக களம் இறங்கப்போவதாக பாஜக தலைவர்கள் பலமுறை கூறியுள்ளனர்.
இந்த சூழலில் ஷரத் பவார் இன்று பிரதமர் மோடியை சந்தித்து நீண்ட நேரம் பேசியது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. எதிர்கட்சிகளின் சார்பில் ஷரத் பவார் (Sharad Pawar) குடியரசுத் தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், ஷரத் பவார் - பிரதமர் மோடி சந்திப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ:மேகதாது விவகாரம்: அனைத்துக்கட்சிக் குழுவின் டெல்லி பயணம் வெற்றியா? தோல்வியா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR