அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தலைமையிலான குவாட் (QUAD) உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளவும்,  இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவும், ஐநா பொதுச் சபையில் உரையாற்றவும் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா  சென்றுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மூன்று நாள் பயணமாக வாஷிங்டன் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு (PM Narendra Modi) வாஷிங்டன் டிசி யில் உள்ள ஜயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸில் இந்திய சமூகத்தினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வாஷிங்டன் டிசியில் அவரது விமானம் தரையிறங்கிய உடனேயே விமான நிலையத்தில் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்


பிரதமர் தனது வெளிநாட்டுப் பயணத்தின் போது, மிக பெரிய கூட்டம் ஒன்றில், அந்த நாட்டில் வாழும் இந்தியர்களியே உரையாற்றுவது வழக்கம். இருப்பினும், தற்போதைய கோவிட் -19 நிலவரம் காரணமாக, பிரதமர் அது போன்ற ஒரு கூட்டத்தில் உரையாற்ற வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. 


அவர் விமான நிலையத்திற்கு வந்தவுடன், அவரை அமெரிக்க அரசு உயர் அதிகாரிகளான டி.எச். பிரையன் மெக்கீன், வாஷிங்டன் டிசி யில் உள்ள அமெரிக்க நிர்வாகத்துறை இணை அமைச்சர் ஆண்ட்ரூஸ் ஆகியோர் வரவேற்றனர். மேலும், அமெரிக்க ராண்வு பிரிகேடியர் அனூப் சிங்கால், ஏர் கொமடோர் அஞ்சன் பத்ரா மற்றும் கடற்படை இணை கமாடோர் நிர்பயா பாப்னா உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகளும், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து ஆகியோரும் வரவேற்றார்.


ALSO READ: Quad மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி அமெரிக்க பயணம்


தனது அமெரிக்க பயணத்தில் அமெரிக்க துணைத் தலைவர் கமலா ஹாரிஸை, பிரதமர் மோடி சந்தித்தார்
"துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை சந்தித்து அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் நமது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசனை செய்யப்படும்" என்று பிரதமர் மோடி கூறினார்.


முதல் நாளில் மோடி தலைமை நிர்வாக அதிகாரிகளை சந்திக்கிறார். அமெரிக்காவில் உள்ள தலைமை நிர்வாக அதிகாரிகளுடனான சந்திப்பின் போது இந்தியாவில் பொருளாதார வாய்ப்புகள் குறித்து முக்கியமாக ஆலோசனை செய்யப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். வியாழக்கிழமை (செப்டம்பர் 23), முதல் ஐந்து அமெரிக்க தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் பிரதமர் ஒருவர் சந்திப்பு நடத்த உள்ளார். அவர்களில் இருவர் இந்திய அமெரிக்கர்கள் - அடோப் (Adobe)நிறுவனத்தை  சேர்ந்த சாந்தனு நாராயன் மற்றும் பொது அணுவியலில் (General Atomics) நிறுவனத்தை விவேக் லால். மற்ற மூவெர் குவால்காமில் (Qualcomm) இருந்து கிறிஸ்டியானோ இ அமோன், ஃபர்ஸ்ட் சோலார் நிறுவப்னத்தில் மார்க் விட்மர் மற்றும் பிளாக்ஸ்டோனைச் சேர்ந்த ஸ்டீபன் ஏ ஸ்வார்ஸ்மேன் ஆகியோர்


ALSO READ:SCO Summit 2021: ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இன்னும் உதவ விரும்புகிறோம்: பிரதமர் மோடி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR