லக்னோ: அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக வளாகத்தை 'மினி இந்தியா' என பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை இந்த பல்கலைகழகத்தின்  சிறப்பு அம்சமான பன்முகத்தன்மையை  ஒருபோதும் மறக்கவோ பலவீனப்படுத்தவோ கூடாது என்று கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அலிகார் முஸ்லீம்  பல்கலைக்கழகத்தின் (AMU) நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உரையாற்றிய பிரதமர் 'ஒரே இந்தியா, வளமான இந்தியா'  என்னும்  இயக்கம் நாளுக்கு நாள் வலுவடைய நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், "என்று கூறினார்.


”இங்கு ஒருபுறம் அரபு மொழி கற்பிக்கப்படுகிறது மறுபுறம் சமஸ்கிருத மொழியும் கற்பிக்கப்படுகிறது. ஒரு பக்கம், புனித குர்ஆனின் போதனைகளை இங்கே கற்றுக்கொள்ளலாம், மறுபுறம், பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள போதனைகளையும் AMU கற்பிக்கிறது. இஸ்லாமிய உலகத்துடன் பண்பாட்டு ரீதியான உறவுகளைப் பலப்படுத்த அலிகர் உதவியுள்ளது. இது தான் இந்தியா. ”என்று அவர் மேலும் கூறினார்.


ALSO READ | ஜல்லி கட்டு காளைகள் கொரோனா தடையை தகர்த்தெரியுமா..!!.


COVID-19 நெருக்கடியின் போது பல்கலைக்கழகம் செய்த பணிகளைப் பாராட்டிய பிரதமர், சமீபத்தில், COVID-19 தொற்றுநோய்களின் போது, ​​பல்கலைகழகம் சோதனைகளுக்கான வசதிகளை அமைத்து கொடுத்ததோடு, குவாரண்டைன் வார்டுகள் மற்றும் பிளாஸ்மா வங்கியை உருவாக்கி உதவியது என்றார். அதே போல் PM CARES க்கு குறிப்பிடத்தக்க வகையில் நிதி அளித்தது, என  அனைத்து நடவடிக்கைகளும் தேசத்தின் முன்னேற்றத்தில் பங்கெடுக்கும் உண்மையான நோக்கத்தைக் காட்டுகின்றன என பிரதமர் தெரிவித்தார்.


தற்சார்பு இந்தியா குறித்து பேசிய பிரதமர்நரேந்திர மோடி (PM Narendra Modi), "'லோக்கல் டு குளோபல்'  என்னும் குறிக்கோளுடன் இந்தியாவை எவ்வாறு தற்சார்ப்பு இந்தியாவாக மாற்ற எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் உங்கள் அனைவரிடமும் கேட்க விரும்புகிறேன். உங்கள் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள் எப்போதும் வரவேற்க்கப்படுகின்றன, பெரிதும் மதிக்கப்படுகின்றன. இது உங்கள் கருத்துக்களை அறிய நான் விரும்புகிறேன்" என்றார்.


சமூகத்துக்கு அரசியல் அவசியம்தான், ஆனால்  அரசியலை விடவும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் உள்ளன. நாட்டின் முன்னேற்றத்தை பாதிக்கும் அரசியல் கூடாது என பிரதமர் கூறினார்.


”நலிவுற்றவர்கள் வளர்ச்சிக்காக தற்சார்பு இந்தியாவைக் கட்டமைப்பதை நோக்கி பணியாற்றுவோம். இந்தியா (India) தனது சுதந்திர தினத்தின் நூற்றாண்டு விழாவை கொண்டாட இன்னும் 27 ஆண்டுகள் உள்ளன. இந்த 27 ஆண்டுகளில் உங்களது ஒவ்வொரு நடவடிக்கையும் தற்சார்பு இந்தியா என்னும் குறிக்கோளை நோக்கியதாகஇருக்க வேண்டும்” என பிரதமர் மோடி தெரிவித்தார்.


செவ்வாயன்று பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாணவர்களிடையே பிரதமர் வீடியோ கான்பரென்ஸிங் மூலம் உரையாற்றினார்.


ALSO READ | பகீர் தகவல்: பிரிட்டனில் இருந்து சென்னை வந்த பயணிக்கு கொரோனா தொற்று


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR