தமிழகத்தின் உயர்ந்த கலாச்சாரம் குறித்து பெருமை அடைகிறேன் -பிரதமர் மோடி
தமிழகத்தில் உள்ள அனைத்து இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். தமிழர்களின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் அழிக்க துடிக்கும் பீட்டா போன்ற அமைப்புகளை இந்தியா முழுவதும் தடை செய்ய வேண்டும். ஜல்லிகட்டு என்பது தமிழர்களின் வீரம், கலாச்சாரம் மற்றும் பண்பாடு சார்ந்தது மட்டுமல்லாது அறிவியல் சார்ந்ததும் கூட என்று ஜல்லிகட்டிற்கான ஆதரவுகளை அளித்து வருகின்றனர்.
நேற்று தமிழகம் மற்றும் புதுவையிலும் முழுஅடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் கூறியதாவது:-
தமிழக முன்னேற்றத்தில் மத்திய அரசு முழு அக்கறை செலுத்தி வருகிறது. தமிழகத்தின் உயர்ந்த கலாச்சாரம் குறித்து நாங்கள் பெருமை அடைகிறோம். தமிழக மக்களின் கலாச்சார லட்சியங்களை பூர்த்தி செய்யும் வகையிலான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.