புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் நாட்டு மக்களுடன் உரையாற்றுகிறார். இன்று மாலை 6 மணிக்கு ​​பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பை அறிவிக்க உள்ளார். கொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கை குறித்து நாட்டு மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி கூற வாய்ப்பு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் (Twitter) பகக்த்தில், "இன்று மாலை 6 மணிக்கு நாட்டிற்கு ஒரு செய்தியை அறிவிக்க உள்ளேன். நாட்டு மக்களுடன் ஒரு செய்தியைப் பகிர்ந்து கொள்கிறேன். அனைவரும் 6 மணிக்கு ஒன்று கூட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.


 



பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து நாட்டிற்கு என்ன செய்தி வரும் என்பது குறித்து ஊகங்கள் எழுந்துள்ளன. இந்தியாவில் கொரோனா (Coronavirus in India) பரவத் தொடங்கியதிலிருந்து, பிரதமர் நாட்டு மக்களுடன் பல முறை உரையாற்றி உள்ளார். மார்ச் மாதம் முதல், மார்ச் 19 அன்று, பொது ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார். இதன் பின்னர், மார்ச் 24 அன்று அவர் உரையாற்றியபோது, ​​21 நாள் ஊரடங்கு உத்தரவை அறிவித்தார். பின்னர் "தற்சார்பு இந்தியா" திட்டத்தின் கீழ் 20 லட்சம் கோடி ரூபாய் நிதி தொகுப்பை அறிவித்தார்.


ALSO READ |  தற்சார்பு இந்தியா உலகளாவிய அமைதி, பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும்: PM Modi


நாட்டில் கொரோனா பரவல் மற்றும் அதற்கான தடுப்பூசி (Corona Vaccine) தயாரிப்பு குறித்தும், மேலும் ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஒன்று மாலை நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி பேச உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR