தற்சார்பு இந்தியா உலகளாவிய அமைதி, பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும்: PM Modi

"இந்தியாவில் பாதுகாப்பு உற்பத்தியை அதிகரிப்பதே அரசின் நோக்கம்" என்று பிரதமர் தனது உரையில் கூறினார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 27, 2020, 08:55 PM IST
  • பல ஆண்டுகளாக, பாதுகாப்பு இறக்குமதி அதிகம் மேற்கொள்ளும் நாடுகளில் இந்தியா ஒன்றாகும்.
  • சுயசார்பு பாரதம் மூலம், உலகளாவிய அமைதி ஏற்படுவதோடு, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று பிரதமர் மோடி கூறினார்.
  • பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் முப்படைகளின் தலைவர் ஜெனரல் பிபின் ராவத் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்
தற்சார்பு இந்தியா உலகளாவிய அமைதி, பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும்: PM Modi title=

புதுடெல்லி: பாதுகாப்பு ஆயுதங்களின் உள்நாட்டு உற்பத்தி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை வெப்மினார் ஒன்றில் உரையாற்றினார். அதில் பாதுகாப்பு உற்பத்தித் துறையில் 74 சதவீதம் வரை அன்னிய நேரடி முதலீட்டை (FDI) ஏற்படுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

"இந்தியாவில் பாதுகாப்பு உற்பத்தியை அதிகரிப்பதே அரசின் நோக்கம்" என்று பிரதமர் தனது உரையில் கூறினார்.

"பல ஆண்டுகளாக,  பாதுகாப்பு இறக்குமதி அதிகம் மேற்கொள்ளும் நாடுகளில் இந்தியா ஒன்றாகும். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபோது, ​​நாட்டில் பாதுகாப்பு உற்பத்திக்கான திறன் பெருமளவில் இருந்தது. 100 ஆண்டுகளுக்கும் மேலாக பாதுகாப்பு உற்பத்திக்கான உகந்த சூழல் நிலவுகிறது. துரதிர்ஷ்டவசமாக, இந்த விஷயத்தில் தேவையான அளவு நாம் கவனம் செலுத்த முடியவில்லை, ”என்று பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.

இந்தத் துறையில் தனியார் துறையினருக்கு முக்கிய பங்கைக் வழங்கி, புதிய தொழில்நுட்பத்தை மேம்படுத்தி, நாட்டின் பாதுகாப்பு உற்பத்தியை பெருக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், இந்தியாவில் பாதுகாப்பு உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில்,  சில பாதுகாப்பு உபகரணங்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

சுயசார்பு பாரதம் மூலம், உலகளாவிய அமைதி ஏற்படுவதோடு, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று பிரதமர் மோடி கூறினார்.

இதற்கிடையில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தற்சார்பு பாரதத்தின் மூலம் உலகுக்கு சிறந்த முறையில் பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதே, அரசின் நோக்கம் என்று அவர் கூறினார்.

ALSO READ | மனம் இருந்தால் மார்க்கமுண்டு என அசத்தும் கேரளாவை சேர்ந்த பிரபல ரிசார்ட்..!!!

”இந்த நோக்கில் தான் 101 பாதுகாப்பு துறை சார்ந்த பொருட்களை இறக்குமதி செய்வதற்கான தடை போன்ற சில தைரியமான கொள்கை சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, ”என்று வெபினாரில் ராஜ் நாத் சிங் கூறினார்.

" மேக் இன் இந்தியா " (Make in India) மட்டுமல்ல," மேக் ஃபார் வேர்ல்டு " (Make for World) என்ற இலக்கையும்  நாம் அடைவோம் என்று நான் நம்புகிறேன்," என்று ராஜ்நாத் சிங் கூறினார்.

முன்னதாக, முப்படைகளின் தலைவரான ஜெனரல் பிபின் ராவத், பாதுகாப்புத் துறையில் நாட்டை தற்சார்பு கொண்டதாக ஆக்க,  அடுத்த தலைமுறை இராணுவ தளங்கள் மற்றும் உபகரணங்களை உருவாக்குவதில் உள்நாட்டு நிறுவனங்களை ஈடுபடுத்த இந்தியாவின் முப்படைகளும் உறுதிபூண்டுள்ளன என்று கூறினார்.

"உள்நாட்டு தொழில்நுட்பம் மற்றும் சாதனங்கள் மூலம் போர்களில் வெற்றி பெறுவதை விட வேறு எதுவும் நமக்கு திருப்தியை அளிக்காது" என்று அவர் வெபினாரில் கூறினார்.

இந்தியாவை பாதுகாப்பு உற்பத்தியின் மையமாக மாற்ற மத்திய அரசு ஏற்கனவே திட்டமிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது

ஆகஸ்ட் 9 ம் தேதி இந்தியா இலகு ரக போர் ஹெலிகாப்டர்கள், வழக்கமாக பயன்படுத்தப்படும் நீர்மூழ்கிக் கப்பல்கள், கப்பல் ஏவுகணைகள் உடப்ட 101 ஆயுதங்களை இறக்குமதி செய்வதை நிறுத்த போவதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்தார்.

ALSO READ | COVID-19 Update: இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 33 லட்சத்தை தாண்டியது..!!!

Trending News