பிரதமர் மோடி இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் முதன் முறையாக இன்று மீண்டும் வானொலியில் உரை நிகழ்த்துகிறார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்களுடன் வானொலி வாயிலாக உரையாற்றி வருகிறார். இந்த உரை நிகழ்ச்சி அகில இந்திய வானொலி உட்பட அனைத்து வானொலிகளும் காலை 11 மணிக்கு ஒலிபரப்பு செய்யப்படும். இந்நிலையில், மக்களவை தேர்தல் வெற்றிக்கு பின்னர் பிரதமர் மோடி இன்று முதல் முறையாக மீண்டும் வானொலியில் உரை நிகழ்த்துகிறார். 


மன் கீ பாத் என்ற தொடரில் கடந்த முறை பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக் காட்டி பிரதமர் மோடி வானொலியில் நிகழ்த்திய உரைகள் மிகுந்த வரவேற்பை பெற்றன. மக்களவைத் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து இந்த உரை கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவு பெற்றது. நான்கு மாதங்களுக்குப் பிறகு பிரதமர் மோடி இன்று காலை 11 மணிக்கு மன் கீ பாத் உரையை மீண்டும் தொடங்க உள்ளார்.



இது குறித்து தமது டிவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, 130 கோடி இந்திய மக்களுடன் உரையாட ஆவலுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். மக்களின் அன்பையும் அது அளிக்கக் கூடிய சாதகமான உணர்ச்சியையும் மிகவும் விரும்புவதாகவும் மோடி தெரிவித்துள்ளார். மோடியின் உரையை துவாரகாவில் உள்ள காக்ரோலா விளையாட்டரங்கில் உள்ள வானொலியில் கேட்க இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.